INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

LEENA MANIMEKALAI

 A POEM BY

LEENA MANIMEKALAI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

You are at fault
to have fallen in love with a Poet
How can you drive out the Love
that melting the Time
turns it into tiny oxygen-balls
and sends them into the blood vessels
How can you turn away from love supreme
that builds a land as a floating song
and invites you to dance there.
How can you find release from the delirium
with sultriness salubriousness snow rain and
chill
shrouding you every now and then at will
that turns the world you dwell
into a bizarre isle
At the very moment when you were wondering
whether all those kisses and mating
and the secretions therein
have turned into thin air
digging a grand sea
with the language coined exclusively for thee
extending invitation for a swim in that
Ho, how can you escape from this magical plot?
Poor you, what at all can you do
For a little cure
You go to your god every Saturday
without fail
and pray to no avail
Gods are at a loss
Not knowing the souls of
the Sub-Conscious
Do one thing
Just open your palms and then close
Do as I tell
Setting free what is seized
Securing that unleashed
Love knows it all only too well.

ஒரு கவிஞரை நேசிப்பது
உன் தவறு
காலத்தை உருக்கி
சிறு பிராணவாயு பந்துகளாக்கி
உன் உதிரப் பாதைகளில் செலுத்திவிடும்
காதலை எப்படி வெளியேற்றுவாய்
மிதக்கும் பாடலென நிலத்தை
எழுப்பி அதில் நடனமிட அழைக்கும்
பிரியத்திலிருந்து எப்படி திரும்புவாய்
வெக்கையும் பனியும் மழையும் கூதலுமென
மணிக்கொரு பருவ மாற்றத்தால்
உன் இயலுலகை விநோத தீவாக்கும்
பித்திலிருந்து எப்படி விடுவித்துக் கொள்வாய்
முத்தங்களும் கலவியும் சுரந்த நீரெல்லாம்
ஆவியாகி விட்டதாவென வியந்துகொண்டிருக்கும் கணத்தில்
உனக்கே உனக்கான புது ஆழியை
மொழியால் வெட்டி அதில் நீந்த அழைக்கும்
மாயத்திலிருந்து எப்படி தப்புவாய்
பாவம் நீயும் என்ன செய்வாய்
உன்னை சற்று குணமாக்கிக்கொள்ள
உன் கடவுளிடம் சனிக்கிழமை தோறும்
தவறாமல் முறையிட்டு கொண்டிருக்கிறாய்
அந்தராத்மாக்களை எந்த கடவுளும் அறியார்
ஒன்று செய்
உன் உள்ளங்கையை விரித்து மூடு
அகப்படுத்தியதை வெளியேற்றுவதும்
வெளியேற்றியதை அகப்படுத்துவதும்
அன்புக்கு தெரியும் .
லீனா மணிமேகலை

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024