INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

 TWO POEMS BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Looking at the tree where seated she said thus:
“While rising above from the branch
the bird’s thought displaces the tree”
‘Time for parting’
I jotted down.
5.45 p.m.
Sharing the lone strand of withered feather
in Facebook
might get delayed by a few moments.
In the long stretch of passage
the cloud coins a poem as follows:
“She who was with the tree
is today with my heart”
The sky and myself
haven’t chosen our gender-stance
The tree
stands tall and erect
as the huge block for both of us
The customary readers of Poetry
_ please excuse me.
In my poem
there might surely be more than one woman.
When she concludes herself
as the breeze surging above from the branch
the winged kite of the boy
who has just got into this scene
gets entangled.
Thirugnanasampanthan Lalithakopan

அமர்ந்திருந்த மரத்தினை நோக்கி
இவ்வாறு கூறினாள்
"கிளையிலிருந்து மேலெழுகையில்
பறவையின் சிந்தனை மரத்தினை
இடம்பெயர்க்கிறது"
பிரிவதற்கான நேரமென
குறிப்பெடுத்துக்கொண்டேன்
பிற்பகல் 5.45.
உதிர்ந்து கிடக்கும்
ஒற்றை இறகினை
முகநூலில் பரிமாறிக்கொள்ள
சில கணங்கள் தாமதமாகலாம்.
நெடிய பாதையில்
மேகம் இவ்வாறு கவிதை புனைகிறது
"மரத்தோடு இருந்தவள்
இன்றென் மனதோடு"
நானும் வானமும்
எங்களுக்கான
பால்நிலையினை தேர்வு செய்யவில்லை
மரம் எங்களுக்கான
பெரும்தடையாக
நிமிர்கிறது.
கவிதையின் மரபார்ந்த
வாசகர்கள் மன்னியுங்கள்
எனது கவிதையில்
நிச்சயமாக ஒன்றுக்கு
மேற்பட்ட பெண்கள் இருக்கலாம்
கிளையிலிருந்து
மேலெழும் காற்றாக அவள்
தன்னை இறுதி செய்கையில்
சிக்கி கொள்கிறது
இந்த காட்சிக்குள் இப்போதுதான்
நுழைந்த சிறுவனின்
பறவைப்பட்டம்.
-லலித்தா-
(2)
In the page ending with
PTO’
the image of a tree was there
Searching for the third page
of the leaf dropped down
the leaves falling further
probe along the air
At the instant of closing the book
darkness hovers.
Leaving along the way she who
forgot to switch off the light _
Moves on
Tomorrow’s Morn.
I go past the
flight of fancy
about the fireflies
While losing the page that opens
the book again
from some page arrives
the mobile’s signalling light waves.
Thirugnanasampanthan Lalithakopan
"மறுபக்கம் பார்க்க"
என முடிந்த பக்கத்தில்
மரத்தின் படம் இருந்தது
கீழே விழுந்த இலையின்
மூன்றாம் பக்கம்
தேடி காற்று வெளியிடையே துழாவுகின்றன
மேலும் வீழ்கின்ற இலைகள்.
புத்தகத்தை மூடும்
தருணத்தில் இருள் கவிழ்கிறது
விளக்கை அணைக்க மறந்தவளை
வழியில் விட்டு நகர்கிறது
நாளைய காலை
மின்மினிகள் குறித்த கற்பனையை
கடந்து செல்கிறேன்
மீண்டும் புத்தகத்தை திறக்கும்
பக்கத்தை தவற விடுகையில்
ஏதோவோர் பக்கத்திலிருந்து
அலைபேசியின் ஒளிச்சமிக்ஞைகள்.
-லலித்தா-


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE