THREE POEMS BY
NESAMITHRAN
there is
But is there a stomach
with hunger any the less
Are there eyes
where tears sprout
in lesser measure
Yet
close to tooth that would lie
in wait
for a chance to cut
the tongue since ages
stay alive; survive
Let’s face life head-on
and live lock stock and barrel
– come on.
கை சூம்பிய உடல் உண்டு
உயரம் குறைந்த கால் உண்டு
மூளை முழுதும் முளைக்காத சிரம் உண்டு
கம்மியாய் பசி வசிக்கும் வயிறுண்டா
பார்வை இல்லாவிட்டாலும்
கண்ணீர் குறைவாய் சுரக்கும் கண்ணுண்டா
ஆனாலும் அசந்தால் வெட்டும்
பல்லுக்கு பக்கத்தில்தான் நாக்கு
பலகாலம்
பிழைத்துக் கிடக்கிறது
வாழ்ந்து பார்த்துவிடலாம்
- நேச மித்ரன்
(2)
the Helium balloon moments
with nowhere to go
writhe and sway
After obtaining pardon
the earlier countenance
the plaster of paris hand
of the porcelain doll
Between the one
who escapes from the submarine
and the other who alights
holding on to parachute
with face burning all the way
a Kiwi bird is breaking its shell
to find release.
A thermometer mercury
Hope
so much
The Wait
as the air gap of a flask
Fondness and care
that the smile of a nurse
circulate
The hands of the clocks made to hang
outside the operation theatres
are made of snail’s sensors
For the fingers that feel the void of the
organ donated
So soft a night
is indeed too much
6 year old Naveena
practicing to move around with walker
after the heart surgery
go past
uttering the name of the one inside
and enquiring after his well-being.
நேச மித்ரன்
•
இருதய ரண சிகிச்சை
தண்டனைக்காலம் முடிந்ததும்
போகும் இடம் ஏதுமற்ற
ஹீலியம் பலூன்கள் கணங்கள்
அலைவுறுகின்றன
மன்னிக்கப்பட்ட பிறகு
முன்பிருந்த முகம்
பீங்கான் பொம்மையின்
ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ் கரம்
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து
தப்புகிறவனுக்கும்
பாராசூட்டைப் பற்றியபடி
முகமெரிய இறங்குகிறவனுக்கும்
நடுவில் ஒரு கிவிப் பறவை தன்
ஓடுடைத்துக் கொண்டிருக்கிறது
வெளியேற
ஒரு தெர்மாமீட்டர் பாதரசம்
அவ்வளவு
நம்பிக்கை
ப்ளாஸ்க் இடைவெளியளவாய்
காத்திருப்பு
ஓர் செவிலியின் புன்னகை
படர்த்தும் அன்பு
அறுவை சிகிச்சை அரங்கு வெளியே
மாட்டப்பட்டிருக்கும் கடிகாரங்களின்
முட்கள் நத்தைகளின் உணரிகளால்
ஆனவை
தானமளித்த ஒரு பாகத்தின் வெற்றிடத்தை
தொட்டுணரும் விரலுக்கு
இவ்வளவு மிருதுவான இரவு
சாலமிகுத்துப் பெய்ததுதான்
இதய ரண சிகிச்சைக்குப் பின்
வாக்கரில் நடந்து பழகும்
6 வயது சிறுமி நவீனா
உள்ளே இருப்பவரின் பெயர் சொல்லி
நலம் விசாரித்துக் கடக்கிறாள்.
Air would enter and exit
The stem of the sunflower is
A little more concentrated.
The peacock feather can make predictions
to the Rain.
For the sunflower _
Sun coursing direction.
The lifespan of peacock plume that being non-being
tells auspicious omen
the Sun flower has not.
For Summer and Monsoon
your ‘Spring would be Forever’ solace and succor.
stands there with plumes spread all over.
கலாபம்
மயிலிறகின் வெண்தண்டில்
காற்றுப் புகுந்து வெளியேறும்
சூரியகாந்திப் பூவின் தண்டு கொஞ்சம்
அடர்த்தி
மயிலிறகுக்கு மழைக்கு சகுனம் சொல்ல
வாய்த்திருக்கிறது
மழையுண்டு பூக்கும்
சூரிய காந்திக்கு சூரியன்
செல்லும் திசை
இன்மையில் இருந்து நற்சகுனம்
சொல்லும் மயிலிறகின் ஆயுள்
வாய்க்கவில்லை சூரியகாந்திப் பூவிற்கு
கோடைக்கும் கார்காலத்திற்கும்
கலாபம் விரித்து நிற்கிறது
உன்
வசந்தம் நிலைக்கும் என்ற
ஆறுதல்
நேச மித்ரன்
No comments:
Post a Comment