INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, February 27, 2023

RAMESH PREDAN

TWO POEMS BY

RAMESH PREDAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. TIMERAIN

He came running from different directions
and found shelter under the same roof.
By the time the sky cleared
we had waded through a hundred years.
Such a rain would never have poured
before
Writing anyones history
In one sitting
with no corrections nor deletions
Though living under the same roof
Till the time we move out of the social constructs
That have defined me as male
And you as female
The gender-divide of the two bodies
would continue mutually alienating.
Till date you touch and feel me
As but a man alone.
Only because you are not like me
That I continue to live with thee.
The affinity nurtured by dissimilarities
In the space between these differing bodies
Family society Nationality
As plants trees jungles
Yes our politics
Begins from gender-body divide.
You who sought shelter in rain
turned into tree.
I who got drenched in the downpour
metamorphosed into Rain
This jungle is a century old
Upon the ornate temple-tower of the
Chola era
a Peepal sapling -
its age, a millennium.
Ramesh Predan
○ காலமழை

வெவ்வேறு திசை வழியே ஓடிவந்து
ஒரே கூரையின் கீழ் ஒதுங்கினோம்
வானம் வெளுத்தபோது
நூறாண்டுகளைக் கடந்திருந்தோம்
இப்படியொரு மழை
இதற்கு முன்னே பொழிந்து
யாருடைய வரலாறையும்
அடித்தல் திருத்தலின்றி
ஒரே அமர்வில் எழுதியிருக்காது
ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும்
என்னை ஆணாகவும்
உன்னைப் பெண்ணாகவும்
வரையறுத்த
சமூகச் செயல்திட்டத்திலிருந்து
வெளியேறாதவரை
இரு உடம்பின் பால் வேற்றுமை
ஒருவரையொருவர்
அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கும்
இன்றுவரை என்னை ஓர்
ஆணாகவே தொட்டுணர்கிறாய்
நீ என்னைப்போல் இல்லாததாலேயே
இன்றுவரை உன்னுடன் வாழ்கிறேன்
வேற்றுமைகளால் விளைந்த உறவு
இந்த வேறுபடும் உடம்புகளின் இடைவெளியில்
குடும்பம் சமூகம் தேசியம்
செடியாய் மரமாய் காடாய்
ஆம், நமது அரசியல்
வேறுபடும் பாலுடம்பிலிருந்துத் தொடங்குகிறது
மழைக்கு ஒதுங்கியவள் மரமானாய்
மழையில் நனைந்தவன்
மழையானேன்
இந்தக் காட்டுக்கு நூறு வயது
சோழர் காலக் கோயில் கோபுரத்தில் அரசங்கன்று
அதற்கு வயது ஆயிரம்.


(2)FROM PERIPHERAL TO CENTRAL
Leave the light there itself
and come – thee alone
Your countenance with pale gloom widespread
would appear as the yet-to ripen sun
entangled inside the fog and
struggling
Full-fledged dawn is flawed in beauty
The shortcomings of the surroundings
Your being turns consummate.
The river that flows on
do not become wholesome
because of the sand-spits seen hither and thither
In the beauty of the blank spaces
not filled by water
you place yourself.
The face that opens the eyes
reveals your body entirely
As long as there are blinking eyelids
there is no nudity as such.
For me to be buried
this land would set aside
some space.
The Neem seed planted in that
would sprout
and create a tree and an Almighty inside it
Collecting the stray ones that
do not contain themselves in the Whole
I would create myself.
I live in the leftovers.
If you feel hungry
swallow me
With my remnants
You would be fulfilled
Ramesh Predan
வெளியிலிருந்து உள்ளே
வெளிச்சத்தை அங்கேயே விட்டுவிட்டு
நீ மட்டும் வா
வெளிர் இருள் படர்ந்த
உனது முகம்
மூடுபனிக்குள் சிக்கித் திணறும்
இன்னும் முதிராதப்
பரிதிபோல இருக்கும்
முழு விடியலில் அழகில்லை
முழு இருட்டில்
எதுவுமில்லை
சூழலின் அரைகுறைத் தன்மையை
உனது இருப்பு நிறைவுசெய்கிறது
ஆங்காங்கே தென்படும் திட்டுக்களால்
ஓடும் ஆறு
முழுமையடைவதில்லை
நீரால் நிரம்பாத
வெற்றிடங்களின் அழகில்
உன்னை இடப்படுத்திக்கொள்கிறாய்
கண்களைத் திறக்கும் முகம்
உனது முழுவுடம்பையும்
வெளிப்படுத்திவிடுகிறது
மூடித்திறக்கும் இமைகள் உள்ளவரை
அம்மணம் இல்லை
நான் புதைக்கப்படுவதற்கு
இந்த நிலம்
கொஞ்சம் இடத்தை
எனக்கு ஒதுக்கித் தரும்
அதில் ஊன்றப்படும்
வேப்பவிதை முளைத்து
ஒரு மரத்தையும்
அதற்குள் ஒரு தெய்வத்தையும் ஆக்கித்தரும்
முழுமையில் தம்மை தரித்துக்கொள்ளாத
உதிரிகளைத் திரட்டி
என்னைச் செய்தேன்
நான் மிச்சத்தில் வாழ்பவன்
உனக்குப் பசித்தால்
என்னைத் தின்றுவிடு
எனது மிச்சத்தால்
முழுமையடைவாய்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024