INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, February 17, 2023

SANGARI SIVAGANESAN

 TWO POEMS BY

SANGARI SIVAGANESAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


The legs that had wandered throughout the day
Through the length and breadth of many a way
The heart that feels weary and forlorn
I would allow them to trod along
the corridor of my own aloneness
to relax and repose
to feel at ease .
I would allow them
to dip their legs
in the stream
Allow them to roll over
in the lawns
I would have them swim across
the blue sky
I would help them reach the moon
and wipe themselves dry.
I would teach them the language of stars.
I would learn love from the lone cloud streak
that is kissing the mountain peak.
Taking them through unknown terrains
then chasing and catching hold of them
with my pen
I would succeed in making them
get inside the enclosure again.
At times
standing atop the mountain
a word would refuse to return.
A dusty word
would leave you perplexed.
A word defying comprehension
would pay no heed
The word bathed in the stream
would come and hug with droplets of water
dripping all over.
Some words would chatter
Some would remain silent
Some words would chat laughing
Some would sulk angrily
All those and more
dashing against each other
Pushing, pulling, then giving way
mutually
one by one would come to sit
and the day’s solitariness
would have turned into a poem composite.
Thus strung with care and concern
so turned into a verse
proving a balm to my fatigues
and a feast to my heart
sweetening the hours
to relish and savour
my poem would’ve metamorphosed
into a bird
to arrive at thee indeed.
நாளெல்லாம் அலைந்து
திரிந்த கால்களையும்
சலித்துக் கொள்ளும் மனதையும்
கொஞ்சம் காலாற
கொஞ்சம் மனமாற
எனக்கான தனிமையின்
தாழ்வாரத்தில் உலவ விடுவேன்..
ஓடையில் கால்களை
நனைக்கச் செய்வேன்..
புல்வெளியில் புரளவிடுவேன்..
நீலவானில் நீந்தச் செய்வேன்..
நிலவில் சென்று துவட்டச் செய்வேன்..
வீண்மீன் மொழிகளை
கற்றுக் கொடுப்பேன்..
உச்சி மலையை முத்தமிடும்
ஒற்றை முகிலிடம்
காதல் பயில்வேன்..
எங்கெங்கோ கூட்டிச் சென்று
பின் எழுதுகோலால்
விரட்டிப் பிடித்து
கூடடையச் செய்து விடுவேன்..
சிலநேரம்
மலையுச்சியில் நின்றுகொண்டு
ஒருசொல் வரமறுக்கும்..
புழுதி படிந்த ஒரு சொல்
துளைத்தெடுக்கும்..
புரியாத ஒரு சொல்
புறக்கணிக்கும்..
ஓடையில் குளித்த சொல்
துளிகள் சொட்டச் சொட்ட
வந்தனைக்கும்..
சில சொற்கள் சலசலக்கும்
சில சொற்கள் மௌனிக்கும்
சில சொற்கள் சிரித்துப் பேசும்
சில சொற்கள் கோபம் கொள்ளும்
அத்தனையும்
முட்டிமோதிப் பின் விட்டுக்கொடுத்து
ஒன்றன் பின் ஒன்றாய் உட்கார்ந்து
ஒரு கவிதையாய் மாறியிருக்கும்
அன்றைய தனிமை..
பார்த்துப் பார்த்துப் கோர்த்த கவிதை
என் சலிப்புக்களுக்கு மருந்தாகி
மனதுக்கு விருந்தாகி
பொழுதுகளை இனிதாக்கிவிட்டு
பறவையாய் மாறியிருக்கும்
உங்களிடம் வருவதற்காய்..
சங்கரி சிவகணேசன்

(2)

The tiny seed
carrying a giant jungle within
would strive to move away
from beneath the crushing rock
and sprout
The rock to be smashed
remains ignorant of the seed’s
‘I’
till it comes to life.
The rocks think that the seeds
are hiding under the boulders
out of fear.
Poor rocks
They were blissfully unaware of
their impending death
that the potency of the seed
would cause
When the life of a seed
blooming in silence
bringing the sky within its reach
and joining hands with the wind
the rocks burn and turn into nothing
The Sun plants affectionate kiss
on the forehead of those plants
that are seeking their
identities.
அழுத்தும் பாறைகளின்
அடியிலிருந்து விலகி
முளைவிட முயலும்
பெருங்காடு சுமக்கும்
சிறு விதை,
உயிர்த்தெழும் வரை புரிவதில்லை
பொடியாகும் பாறைக்கு
விதையின் சுயம்..
வாழ்வதற்கு அஞ்சி
பாறைக்கடியில்
பதுங்கிக் கிடக்கிறது
என்றுதான் அவை
நினைத்துக் கொள்கின்றன..
பாவம் பாறைகள்
விதையின் வீரியத்தில்
நிகழும் அதன் மரணம் பற்றி அறிந்திருக்கவில்லை..
ஓசையில்லாமல் நிகழ்ந்துவிடும்
ஒரு விதையின் உயிர்ப்பு
வானத்தை தன் வசப்படுத்தி
காற்றோடு கை சேர்க்கையில்
வெந்து தணிகின்றன பாறைகள்
முகவரி தேடும் செடிகளை
உச்சி முகர்கிறது சூரியன்...
சங்கரி சிவகணேசன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE