A POEM BY
SATHIYARAJ RAMAKRISHNAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
In an ordinary human face it keeps a door closed.
Imagination of thousands of years grow into a heart.
Before setting out to dance
the sparks and flames might have waited
for thousand years.
Whether flower or insect
All creations would want to grow.
But
Each one has its assigned spot
Growth always takes place in circular motion
It is through sorrows and hardships that
the soul evolves.
Growth takes place in each and every creation.
Deserts eagerly wait to expand
Birds are full of secrets.
Stars are absolutely free.
Everything linked to everything.
It is through links everything evolves.
The way speech aids in spreading news, rumours
and what not _
Oh, don’t you know that!
வளர்தல் என்பது தந்திரமான ஒன்று.
அது
சாதாரண மனித முகத்தில் ஒரு கதவை மூடி வைத்து விடுகிறது.
ஆயிரக்கணக்கான
ஆண்டுகளின் கற்பனையே மனமாக வளர்கிறது.
சுடர்கள் நடனமாடுவதற்கு முன்
ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்திருக்கலாம்.
பூவாயினும் புழுவாயினும்
படைக்கப்பட்ட யாவும் வளரவே ஆசைப்படும்.
ஆனால்
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு இடம் இடக்கிறது.
வளர்தல் எப்போதும் வட்ட வடிவிலே நகர்கிறது.
துன்பங்களின் மூலமே ஆத்மா வளர்ச்சி அடைகிறது.
வளர்தல் என்பது படைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும் நிகழ்வது.
பாலைவனங்கள் வளர்வதற்காகவே காத்திருக்கின்றன.
ரகசியங்கள் நிறைந்தது பறவைகள்.
நட்சத்திரங்கள் சுதந்திரமானது.
எல்லாவற்றோடும் எல்லாம் தொடர்பு உள்ளதுவே.
தொடர்புகள் மூலமே எல்லாம் வளர்கிறது.
பேச்சின் மூலம் விஷயங்கள் எப்படி வளர்கிறதென்பது உங்களுக்குத் தெரியும்தானே?
********************************************
சத்யா
No comments:
Post a Comment