INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, May 29, 2020

POETS IN THIS ISSUE OF INSIGHT UPLOADED ON 30.05.2020

POETS IN THIS ISSUE OF 
INSIGHT 
UPLOADED ON 30.05.2020
1. RAJAJI RAJAGOPALAN 2. KRISHANGINI  3. MULLAI AMUTHAN 
4. K.MOHANARANGAN 5. GOPAL NATHAN 6. AALIYA AALIYA 
7. MA.KALIDAS 8. POET MAJEETH 9. ABDUL JAMEEL 
10. KANAGA BALAN 11. S.P.BALAMURUGAN 
12. KADANGANERIYAN PERUMAL 13. NAFLA KL 
14. MOHAMAD ATHEEK SOLAIKILI 15. THARIK THASKI 
16. VANNAI SIVA 17. HAZEEM AHAMAD MOHIDEEN 1
8. JAMALDEEN WAHABDEEN 19. PA.AKILAN
20.SHARMILA VINOTHINI THIRUNAVUKARASU 
 21. THIRUGNANASAMBANDAN LALITHAKOPAN
22. KANDARADHITHAN 23. RAMKI RAMKI 24.AHAMATH M.SHARIF 
25. MARIMUTHU SIVAKUMAR   27.RAMESH KANNAN




















NAFLA KL'S POEM

A POEM BY 
NAFLA KL

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


 The Word Poetry
is a birdie pecking and eating the ‘I’
a word that keeps wandering in search of the shadow seen when this flies
wrote its identity as Birdie.
Every time its wings fold and spread words came into being one by one.
When all those born rising up step by step and began to hold aloft the ‘I’ weight increasing it returns to ground once again.
With each dot fallen turning into an axis the veins sprouting out of it rubbing each other turning infinite elongates endlessly.
If only we manage to create some magnetic force whereby between all the words yet to be born will be drawn towards each other or move away from one another, then no need to worry about the sprouting veins.
The ‘I’s would be safeguarded.
Then, just as stone thrown in water each ‘I’ would form waves around itself.
The birdie looked down and eyed those ‘I’s which with the force of waves increasing more and more in circumference, frothing.
Should reduce the number of times wings are folded and unfolded, it muttered.
Without the fluttering of wings taken place earlier having collected how is it possible to have so many ‘I’s observed the bird’s shadow.
Being aware of the answer when the ‘I’ falls down at great speed it multiplies itself’ I observed.
Neither the Bird nor its shadow had a clue who I was.
“It is I who wrote this text’ said I.
‘This is what that creates ‘I’s said the shadow.
‘Where is ‘I’ in ‘This’ asked I.
‘they are nothing. They are the names christened by you to the words.
A bird getting into the text which you wrote being ‘I’
Shed an “ in each one of its fluttering. Strolling and floating in the wind when they occasionally got down became words. A person who collects each and every word called it poetry’ said the Bird.*
She who finished reading this shook the sheet of paper in the breeze. Except the ‘I’s all other words scattered. Due to falling, the word ‘Bird’ with wings sprouting flew.
The shadow of the Bird alone is clinging to one of the ‘I’s smeared all over the sheet and remain there hanging suspended

Nafla KL

_கவிதை என்றொரு சொல்_
நான் என்பதைக் கொத்தித் தின்னும் சிறு பறவை.
அது பறக்கையில் தெரியும் நிழல் தேடி உலவும் ஒரு சொல் தன் அடையாளத்தைப் பறவை என்றெழுதியது.
ஒவ்வொரு முறை அதன் சிறகு மடிந்து விரியும் போதும் ஒன்றொன்றாய்ச் சொற்கள் தோன்றின.
தோன்றியவை எல்லாம் மெல்ல மெல்ல மேலெழுந்து 'நான்' என்பதைத் தூக்கிப்படிக்கத் தொடங்கியதும் கனம் அதிகரித்து மீண்டும் நிலத்தை அடைகிறது.
வீழ்ந்த ஒவ்வொரு புள்ளியும் மையமானதில் அதிலிருந்து முளைக்கும் நாளங்கள் ஒன்றையொன்று உரசி முடிவிலியாகி நீண்டு கொண்டிருந்தது.
இனிமேல் தோன்றப்போகும் அத்தனை சொற்களுக்கிடையிலும் ஒன்றையொன்று தள்ளும் படியும் இழுக்கும் படியுமான
ஈர்ப்பு விசை உருவாக்கி விட்டால் முளைக்கும் நாளங்கள் பற்றிக் கவலையில்லை. நான்கள் காப்பாற்றப்படும்.
பின் ஒவ்வொரு நானும் நீரில் எறிந்த கல்லைப்போல் தன்னைச் சுற்றி அலைகளை உருவாக்கும்.
அலைகளின் ஆற்றல் கூடக்கூட நிறை தள்ளிப் பரவும் நான்களைக் குனிந்து பார்த்தது பறவை. சிறகுகளை மடித்து விரிக்கும் தடவைகளை குறைக்க வேண்டும் என்பதாக முணுமுணுத்தது.
முன்னர் நிகழ்ந்தேறிய சிறகசைப்புக்கள் தேங்கியிருக்காமல் இத்தனை நான் எப்படிச் சாத்தியம் என்றது பறவையின் நிழல்.
பதில் தெரிந்ததால் 'நான் என்ற சொல் வேகமாகக் கீழே விழும்போது அது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது' என்றேன்.
பறவைக்கோ, நிழலுக்கோ என்னை யாரென்று தெரியவில்லை.
'நான் தான் இந்தப் பிரதியை எழுதினேன்' என்றேன்.
'நான்களை உருவாக்குவது இதுதான்' என்றது நிழல்.
'இது என்பதில் எங்கிருக்கிறது நான்' என்று கேட்டு வைத்தேன்.
'அவையெல்லாம ஒன்றுமில்லை சொற்களுக்கு நீ சூட்டிய பெயர்கள் தான் அவை. நான் ஆக இருந்துகொண்டு நீ எழுதிய பிரதிக்குள் நுழைந்த ஒரு பறவை அதன் ஒவ்வொரு சிறகசைப்பிலும் ஒரு நானை உதிர்த்தது, அவை காற்றில் அலைந்து மிதந்து எப்போதாவது கீழிறங்கியபோது சொற்களாகின. சொற்கள் ஒவ்வொன்றையும் சேகரிக்கும் ஒருவன் இதைக் கவிதை என்றான்' என்றது பறவை. *
இதைப் படித்து முடித்தவள் காகிதத்தை காற்றில் உதறினாள். நான்களைத்தவிர மற்றைய சொற்கள் அனைத்தும் சிதறுண்டன. விழுந்ததில் பறவை என்ற சொல் சிறகு முளைத்துப் பறந்தது.
பறவையின் நிழல் மட்டும் காகிதத்தில் அப்பியிருக்கும் நான்களில் ஒன்றைப் பிடித்துத் தொங்கிக் கிடக்கிறது.
-நப்லா-






KRISHANGINI'S POEMS

THREE POEMS BY 
KRISHANGINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

//அரை நூற்றாண்டுக்கும் மேலாக, பிரதானமாக சிற்றிதழ்களில் கதை, கவிதை, திறனாய்வு, மொழி பெயர்ப்பு என்று ஆர்வமாக இயங்கிக்கொண்டிருப்பவர் கிருஷாங்கினி. செடிகள், விலங்குகள் பால் அன்புகொண்டவர். இங்கே  மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் அவருடைய கவிதை காளானின் குறுகிய வாழ்வுக் காலம்,அதன் vulnerable இருப்பு குறித்தது என்றாலும் அதன் உட்குறிப்பாய் வாழ்வு விரிகிறது .//

1. THE TALE OF FIVE DAYS

The First Day
Scratching the soil and trying to come up
banging, cracks surfaced on the soil.
Roots of coconut tree, thought I.
the Second Day
I saw a root in the colour of soil
thick as finger.
The Third Day I saw upon a heap of sand
something like a printed white sheet
crumpled and cast away.
The Fourth Day
as the mini-skirt of the “ballet’ dancer
going round and round swirling
with soft wavy white rounds,
forming bigger than the palm emerged.
As the swirling leg’s toe-hold
the stalk stood straight.
The Fifth Day
The mushroom having a fleeting life
and ending in no time
had been severed and thrown away
while sweeping the garden.
Its roots not knowing how to go deep
coming out _
Just a tiny pit remained there.
On the surface of the soil do
I witness everything.

கிருஷாங்கினி (krishangini)
ஐந்து நாள் கதை
முதல்நாள்
மண்கீறிமேலெழும்ப முயன்று
முட்டி, மண்மீது பிளவுகள்
கண்முன் தோன்றின.
தென்னையின் வேரென்று
நினத்தேன் நான்.
இரண்டாம் நாள்
மண் வண்ணத்தில் சற்றே
விரலளவு தடிமனான
வேரொன்று கண்டேன் நான்.
மூன்றான் நாள்
கசக்கி எறியப்பட்ட
அச்சிட்ட வெள்ளைத்தாள்
போலஒரு குவியல் மண்மீது
கண்டேன் நான்.
நான்காம்நாள்
சுழன்று சுழன்றாடும் ‘பாலே’
நாட்டியக்காரியின் குட்டைப்
பாவாடையென, நுனியில்
அலையலையாய் மிருதுவான
வெள்ளை வட்டம், உள்ளங்கையினும்
பெரியதாயுருக்கொண்டு
எழும்பி நின்றது.
சுழலும் காலின் நுனிப்பிடிமானம்
என நிமிர்ந்து நிற்கிறது தண்டு.
ஐந்தாம் நாள்
தானே மடியும் வண்ணம்
ஆயுள் குறைந்த அந்தக் காளான்
தோட்டம் பெருக்கும்போது
பிடுங்கி வீசப்பட்டிருந்தது.
ஆழம் செலுத்தத்தெரியாத
வேர்கள் வெளிப்பட
சிறுகுழிமட்டும் எஞ்சியிருந்தது
மண்ணின் மேற்பரப்பில்.


அனைத்தையும் நான் கண்டேன்.

2. DEATH OF WATER 
AND DEATH BY WATER

Water remains imprisoned
between two plastic cans.
In somewhat grand public places
Marriage Hall, office,
Xerox shop, literary meetings
_ some such spots
caged inside plastic bottles _the Water.
Once I opened a tap for drinking some water….
That which was contained in a small bottle
sprang up with a jerking sound.
I was taken aback, seeing a bubble
on the surface of the water inside the bottle.
Raja who when I was studying in the eighth standard
jumping from the bridge into river Cauvery
banging against the wall of the well in the river
bumped and fell and disappeared for ever,
now surfaced in my memory as a bubble.
Where could be located in the river
the life-bubble of him who lay there
at the bottom of the waters? None knew.
Bloated as bread, eaten he was found.
in the sluice, ten miles away
lying crisscross, blocking the waterflow.
Unable to drink water
hand trembling I placed the cup down.
So what if I drank not?
Others drank in succession
Again and again the bubbles surfacing
and springing up with a jerk.
She who, without saying anything-
holding close her child close
tying it with her as if attempting
to send it back inside her womb once again
deeming it to be safeguarding the child _
She emerged as the next bubble.
Could it be that
the Mother’s life-bubble and that of her child
surfacing one after another?
Or, as one bubble?
Only after floating and turning lifeless _
that she had jumped came to light.
More and more Life-bubbles,
in ponds, water resources, gutters
Below and above _
so lives keep springing and blending
with the wind
Which is life-breath? Which is mere air?
Who at all knows?
Wind’s colour is one and the same.
For the city-bred the jerking bubbles of the bottle
became a natural occurrence.
Plastic bags, bottles with lids, air-filled tyres –
and even balls and life-saving air-rings float in the water,
while there is wind.
But, human bodies alone float
even after exhaling the final drop of breath.
Now
rivers with gaping mouth lie dead staring above.
Pond lake wells also are filled
with empty rhetoric.
At that moment the shocking truth hit me hard
that the bubbles coming out from the waters
imprisoned inside the plastic cans
and water-filled bottles
are but the last breath of ground water.
Drinking the Death of water
We are quenching our thirst

Today.
கிருஷாங்கினி (krishangini)

2. நீரின் மரணமும் 
நீரினால் மரணமும்
சிறைப்பட்டுக்கிடக்கிறது நீர்,
இரண்டு பிளாஸ்டிக் குடுவைகளுக்கு
இடையில்.
சற்றே சிறப்பான பொது இடங்களில்,
திருமண மண்டபம், அலுவலகம்,
ஜெராக்ஸ்கடை, இலக்கியக் கூட்டங்கள்
இன்ன பிற இடங்களிலும்
குடுவையில் சிறைப்பட்டுக் கிடக்கிறது
நீர்.
நீரருந்த ஒருமுறை சிறுகுழாய்
திறந்தேன் நான் -
சிறுகுடுவையில் இருந்த அது
மேலெழும்பி சத்தமிட்டது ‘குபுக்’ என.
அதிர்வடைந்தேன் நான்
நீரின் மேற்பரப்பில் குடுவையினுள்
குமிழைப் பார்த்தவுடன்.
எட்டாவது படிக்கும்போது
பாலத்தின் மீதிருந்து காவிரியில்
கீழே குதித்து நதியிலிருந்த
கிணற்றுச்சுவரில் மோதித் தெறித்து
விழுந்து காணாமலே போன
ராஜா வந்தான் நினைவில்
குமிழாக.
நீரினடியில் இருந்த அவனின்
உயிர்க்குமிழ் நதியின் எவ்விடத்தில்?
தெரியவில்லை.
உப்பி, ரொட்டியைப்போல
தின்னப்பட்டும் கிடைத்தான்
மதகில், பத்துமைல் தொலைவில்
அடைத்துக்கொண்டு குறுக்காக.
நீர் அருந்த இயலாமல்
கை நடுங்க கோப்பையை
கீழேவைத்தேன் - நான்
அருந்தாவிட்டால் என்ன?
அருந்தினார்கள் அடுத்தடுத்து
மீண்டும் ‘குபுக்’ மீண்டும் மேலெழும்
குமிழ்கள்.
எதையும் சொல்லாமல் - தன்
கைப்பிள்ளையை இறுக்கி
மறுபடியும் வயிற்றினுள் செலுத்த
பிணைத்துக்கட்டி, அதுவே
அதன் பாதுகாப்பெனக் கருதி
பிள்ளையுடன் குதித்தாளே கிணற்றினுள்,
அடுத்த குமிழாக வந்தாள் அவள்.
அம்மாவின் உயிர்க்குமிழும்
பிள்ளையின் குமிழும் ஒவ்வொன்றாய்
மேலெழும்பியிருக்குமா?
அல்லது ஒரே குமிழாகவா?

மிதந்து பிணமான பின்தானே
தெரியவந்தது, குதித்துவிட்டதே.
இன்னமும் இன்னமும்
உயிர்க்குமிழ்கள், குளத்திலும்,
நீர்நிலைகளிலும், சாக்கடையிலும்,
அடியிலும் மேலும் என
உயிர்கள் மேலெழும்பி மேலெழும்பிக்
கலக்கின்றன காற்றுடன்
உயிர்மூச்சு எது வெறும் காற்றெது?
யாரறிவார்?
வேறுபட்டா இருக்கிறது காற்றின் நிறம்?
நகரவாசிகளுக்கு குடுவையின்
‘குபுக்’ குமிழ்கள் இயல்பாயிற்று.
பிளாஸ்டிக் பைகள், மூடியிட்ட பாட்டில்கள்,
காற்றுடன் டயர்கள், பலூன்கள் - மற்றும்
பந்துகளும், உயிர்காக்கும் காற்றடைத்த
வளையங்களும் கூட மிதக்கின்றன
நீரில், காற்றுள்ளபோது;
ஆனால்,
உடல்கள்மட்டுமே மிதக்கின்றன
இறுதிமூச்சுக்காற்றையும் வெளிவிட்டபின்னால்
இப்போதோ,
நதிகள் வாய்பிளந்து மல்லாந்து
மரித்துக் கிடக்கின்றன
குளம் ஏரி கிணறுகளும் கூட-
நிரம்பிக் கிடக்கின்றன
வெற்று கோஷங்களால்
பிளாஸ்டிக் குடுவைகளுக்குள்ளும்,
நீர் நிரம்பிய பாட்டில்களுக்குள்ளும்
சிறைப்பிடிக்கப்பட்ட நீரிலிருந்து
வெளிவரும் குமிழ்கள்
நிலத்தடி நீரின் இறுதிமூச்சென
உறைத்தது அப்போதுதான் எனக்கு.
நீரின் மரணத்தைக் குடித்து
தாகம் தணிக்கிறோம் நாம்
இன்று.
+++++++++++

3. PAINFUL AND PAINLESS



(1)
As pain-filled air bags
People come climbing the stairs
With men, women, children,
With groans, screams and pains
Ever overcrowded.
The corridors and verandas
are always filled with
patients and those who bring them
holding, carrying and those holding those
holding the diseased….
Those who have come as visitors,
those accompanying the ailing
Nurses, sitting in front of the computer
and writing prescriptions, Accounts
_ so the diseases surrounded as they are
by the healthy ones
turn a little frightened.
In the overflowing hospitals
All join hands and fight
to drive away the diseases
and to prevent their onslaught.
With these lot and those
having death seated next to them
the corridor sways
filled up to the core.
Fearing the intense protest,
ailments attempt to depart.
Yet, for comfort’s sake
It stays on.
The viruses chased away
Wait for time opportune.
Outside the hospital,
In the street, food
gutters, cough, urine, excretion, phlem
in between the vehicles standing in rows_
they keep looking for prospective persons.
Unaware of the impending attack, people in
large numbers
carry on them at least several viruses.
Will they grow as pet animals
in demonic proportions? or
driven away as beggars?


(2)
Pus oozing all over the body.
As felled Rubber tree as ‘Thandu Maram’
White liquid here and there
Flowing downward.
With each clinical scratch
It streams down in haste.
Seeps and spreads.
The patient ponders:
The human body is but a warehouse of diseases
True what Saint Pattinathaar and many others
had observed _ “Rotten body’ , So muses he.
The pain proving unbearable
Chases Patinathaar away.
Through which hole to release
This brimming pain?
This body so desired by holes
This body so full of holes
Suffers acutely for want of a whole
Unable to release the pain
The body swoons falling to the ground.
Blue revolving light so bright on top, going round and round
Sounding horn, elongated, every now and then,
With pain-filled air-bags lying inside
The vehicle carries them all
Upon its wheels to the hospitals.
Death, birth or something else
The pain-filled air-bags
Lie inside, in the company of their healthy kith and kin.
Not just the big cities, along the highways
But through all streets and lanes the vehicle
go screaming.
On the street too – in an accident,
inside and outside the home,
in different corners, different places
The wails and screams of pain and its groan
Brimming frozen…
Oh, will there be relief from pain?
Or will the very life take leave?
Ambulance is on the move for ever.
Always; everywhere….

(3)
Huge crowds inside wine shops, hospitals – ever so.
In hospitals, however, men and women of all ages; even children-
Caught jam-packed within and without
Suffering acutely.
But, in the wine outlets
It is men alone mostly – very young, young,
Old, too old….
In hospitals human bodies
as bags full of ailments. swimming amidst
the sea of pains.
But, in bars bodies are afloat
Amidst flickering spells of light
People journey
Blissfully forgetting the pain.
Even from hospitals human bodies
Visit the wine shops
And safely return.
Are there a few
Who preserve so safely
That casket of the past
With blood and broken organs
That was once befitting
The term body….?
It bangs against the
Entire stretch of the
Hospital wall as thick
Sticky white rope
And stays glued.
As spider-web the rope
Sticks on unseen unheard
Oh, everyone goes past the sticky string of sound.
The ailing ones pushing them aside in pain
to make way and the healthy ones, so firmly.
The string of sound firm,
Unshaken
Rising above as a web
Attempts to entrap.
The bodies moving past
Elude its clasp and pierce through
Bodies everywhere….
All over the world
Bodies…bodies…
A pain-filled bag
Is being thrown off
Out of that body- all around.
Wail unbearable rising, oh! rising_
those from the placenta in the delivery room.
Sanitary napkins, shit, urine
And stinking bandage-clothes
And the hands that had to collect
All that and more…..


(4)
Everyone is moving fast
Crisscrossing,
Holding the ailing ones
and going past those healthy
in between a stretcher being pushed towards a room
is lying atop the wheels.
An elderly pain-filled air-bag
Lies there, eyes blinking
Hands on its chest
Fear-filled, huddled in a wheel-chair.
With the person pushing it
some more pursuing
A crowd tries to get in.
In the hospital, inside the doctor’s cabin
pains innumerable lie in wait.
In an aged body competing with pain
proves unbearable.
The body gets ready to scream.
Familiar sounds; noises.
They don’t stir anyone there.
With the ailing one entering inside
And the small crowd too
Attempt to accompany
The ailing and just one more body alone
Are allowed inside.
The rest were denied permission.
Just wait for a while.
When their turn comes
The pain-filled and the painless
Bodies step in.
A young man there
Handsome looking
His walk little hesitant,
Clothed in classic attires
With shoes and tie in tact,
Along with his friend
Enter the hospital.
And they wait for their turn
In the company of the small crowd
And many others.
In the hospital, at the
Entrance of the doctor’s cabin,
Till their turn comes
Sports, office, home,
Books read, things disliked
_ so though wished to talk at length
Everything,
With pain pricking every now and then,
Their faces twist
The shirt buttons are loosened a little
In an effort to inhale
Some more air that is everywhere.
Yet,
The aged, pain-filled body
Inside the doctor’s cabin
The small crowd restive in anticipation.
Nothing. Mere fear. With pain accompanying
Relief on the countenance of the Pain-filled bag.
Disappointment comes to prevail
In the small crowd.

(5)
Next to go is the young man
Wearing shoe and tie.
Getting inside with his friend,
In a few minutes the place turned chaotic
in the hospital, inside the doctor’s cabin
The nurses and others releasing all buttons,
pressing the heaving chest
Takes him in a wheel chair
In the face of the friend accompanying
Fear widespread…
Whom all to tell? Which ones are important?
Telephone numbers?
Oh, I know nothing… what to do now?
Coupled with pain, fear and anguish
Grip him
Bringing the stretcher
they push ahead the body
upon the wheels in the hospital
from the doctor’s cabin.
In the hospital, in doctor’s cabin
Along with prescription – fear,
Fearlessness, agitation, disappointment
Are also being offered.
The number of years of our age
Keeps increasing equally for one and all.
According to one’s time, calculated beforehand
In months and years
As our intelligence can decipher – but
Death alone, disrupting this alignment destined
Just like air, chooses bodies as suits
Its whims and fancies.
I, as usual, remain
Observing everything
In utter helplessness.
Domestic violence, accidents, wars, communal riots
Arrogance, haughtiness, avarice,
Natural calamities are all set to
Turn pain-free bodies into pain-filled ones.
Empty; lifeless;
Then, hospitals become overcrowded.
With doctors and medicines proving scarce
Hale and healthy bodies, free of disease
Are converted into ailing ones – forcibly, simultaneously.
Screams filled with pain
And stinking smells, swell
Piercing the air
Everywhere.

வலியுற்றும் வலியற்றும்.
- க்ருஷாங்கினி –
01-
வலி நிரம்பிய பைகளாக
படி ஏறி வருகின்றனர் மக்கள்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்
முதியோர்களும் மற்றும் இளைஞர்களுமாக
மருத்துவ மனை எப்போதும் முனகல்களாலும்,
அலறல்களாலும், வலிகளாலும்
நிரம்பி வழிகின்றன.
கூட்டத்தாலும் கூட.
நோயுடன் நோய்தாங்கியவரும்,
தாங்கியவர்களைத் தாங்கியவர்களும் என
வெளிப் பார்வையாளர்களால்
முற்றம் எப்போதும் நிரம்பி வழிகிறது.
நிரம்பி வழியும் மருத்துவ மனைகளில்
நோயுற்றவர்களை விட ஆரோக்கியமானவர்களே
அதிகம் காணப்படுகின்றனர்.
பார்வையாளர்களாக, உடன் வந்தவர்களாக
மருத்துவராக, பணிப்பெண்களாக
செவிலியராக கணினி முன்
சீட்டெழுதுபவராக
கணக்கெழுதுபவராக
அரோக்கியமானவர்களால் சூழப்பட்ட நோய்கள்
சற்றே
பீதி அடைகின்றன.
அனைவரும் இணைந்து போராடுகின்றனர்
நோயகற்றவும், தடுக்கவுமாக
மரணத்தை அருகில் அமர்த்தி இருப்பவர்களுமாக
முற்றம் நிறைந்து நெளிகிறது.
நோய், போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறது.
மெல்ல வெளியேறிச் செல்ல எத்தனிக்கிறது.
ஆனாலும்,
வசதி கருதி இருப்பிடத்திலேயே
தங்கிக் கொள்கிறது
கட்டாயமாக விரட்டி அடிக்கப்பட்ட
நோய்க் கிருமிகளோ -எனில்
காலம் பார்த்துக் காத்துக்கிடக்கின்றன
மருத்துவ மனையின்
வெளியில், தெருவில், சாப்பாட்டில்,
சாக்கடையில், இருமலில், மூத்திரத்தில்
மலத்தில், சளியில்.
வரிசையாய் நிற்கும் வாகனத்தின்
இடையிடையே ஆள் தேடி அலைகின்றன
கிருமிகள்.
தாக்குதல் அறியாப் பலரும் தன்னுடன்
எடுத்துச் செல்கின்றனர் சில கிருமிகளையாவது.
வளர்ப்பு மிருகமென அது விஸ்வரூபம்
எடுக்குமா? அல்லது யாசிப்போன் என
விரட்டி அடிக்கப்படுமா?
2
உடலெங்கும் சீழ் வடிகிறது
வெட்டுண்ட ரப்பர் மரமென
தண்டு மரம் என ஆங்காங்கே
வெள்ளை திரவம் மேலிருந்து கீழாய்.
கீறிவிட கீறிவிட, இன்னமும்
விரைவாய்க் கீழிறங்கி வருகிறது.
வழிகிறது, துர் நாற்றத்துடன்.
நோயுற்றவன் எண்ணுகிறான்,
உடல் ஒரு நோய்க் கிடங்கென்று.
‘ஊத்த சரீரம்'
பட்டினத்தாரும் பலரும் சொன்னது
சரியென்று எண்ண....
தொடர முடியாத வலி பட்டினத்தாரைப்
பறந்தோடச் செய்கிறது.
நிரம்பித் தளும்பும் வலியை
எந்த துவாரத்தின் வழியே வெளியேற்ற?
துவாரங்களால் விரும்பப்பட்ட இவ்வுடல்
துவாரங்களால் நிரம்பப்பட்ட இவ்வுடல்
துவாரமின்றித் தவிக்கிறது.
வலியை வெளியேற்ற இயலாமல்
மயங்கிச் சரிகிறது உடல்.
நீலச்சுழல் ஒளிர் விளக்கு தலையில்
சுழல, நீளமாக
விட்டு விட்டு குழல் ஒலியிட்டு
வலி நிறைந்த உடல் பைகளைக் கடத்திக்
கொண்டு செல்லுகிறது-வாகனம்
தன் சக்கரங்களின் ஊடாக
மருத்துவ மனைக்கு
இறப்போ, பிறப்போ இன்ன பிறவோ
வலி அடைத்த பைகள் கிடத்தி
இருக்கிறது உள்ளே, ஆரோக்கியத்தின்
உறவுகளுடன் கூட.
பெரு நகரங்களில், பெரிய தெருக்களில்
மட்டுமல்ல --
எல்லா வீதிகளிலும் அலறி அலறி
பயணிக்கிறது -தெருவின் மீதும்
விபத்தில்-வீட்டின் உள்ளும் வெளியிலும்,
ஏதேதோ இடங்களில் வலியின்
அலறலும், முனகலும் -நிறைந்து, உறைந்து
வலி நீங்குமா? உயிர் நீங்குமா?
பயணிக்கிறது வாகனம், வாகனங்கள்
எப்போதும், எங்கெங்கும்.
3-
மதுக் கடைகளிலும், மருத்துவ மனைகளிலும்
நிறைந்திருக்கிறது பெருங்கூட்டம்-எப்போதும்.
மக்கள் கூட்டம்.
மருத்துவமனைகளிலோ ஆண்கள்,
பெண்கள், அனைத்து வயதிலும்
குழந்தைகளும் கூட.
உடலுக்குள்ளும் வெளியேயும் நெரிசலில்
சிக்கித் தவிக்கிறார்கள்.
மதுக்கடைகளிலோ
பல பருவத்தினர் ஆண்களே
அநேகமாக.
மருத்துவ மனைகளில் வலிப்பைகளாக
உடல்கள் , வலிகளின் இடையே
நீந்தி, நீந்திக் கடக்கின்றன.
மதுக்கடைகளோ எனில் மிதக்கும் உடல்கள்,
மின்னி மின்னி மறையும் ஒளிகளில்
வலி மறந்து பயணிக்கிறார்கள்
மக்கள்.
மதுக்கடைகளிருந்து மறந்த
வலிகளிகளிலிருந்தும் மீண்டு
வயிறு வீங்கி வலி நிறைந்து
மருத்துவ மனை நோக்கி
வருகிறார்கள் குடிமக்கள்-
என்றாவது ஒரு நாள்
கண்டிப்பாக.
உற்றாரும், உறவினரும்
மீட்டெடுக்க.
மருத்துவ மனைகளிலிருந்தும் -மதுக்
கடைகளுக்கு சென்று மீள்கின்றன,
உடல்கள்.
முன்னொரு நாள் உடல் என்றிருந்த
ரத்தமும், உடைந்த பாகங்களுமாக
அந்த இறந்தகாலப் பெட்டகத்தினை
அடுக்கிப் பேணி பாதுகாக்கும்
ஒரு சிலர்?
மருத்துவ மனைகளில் கழிவு
நீர்த் தொட்டிகளையும்,
அடைத்த சாக்கடைக் குழிகளையும், அள்ளி எறிய
ரத்தமும், பிரசவ அறையின் வெளியேறிய
பனிக்குடக் கழிவுகளையும்
மாதவிடாய்ப் பஞ்சுகளையும், மலத்தையும்,
மூதிரத்தையும், சீழ் வடியும் நாற்ற கட்டுத்
துணிகளையும் பிசுபிசுக்கும் அள்ளிய கைகளை
மறக்க ஒரு சிலரேனும் சென்று
திரும்பலாம், உடலால் மதுக்கடைகளுக்கு
மிதக்க நினைவுகள் மறக்க.
4-
எல்லோரும் குறுக்கும் நெடுக்குமாகக்
கடந்து கொண்டிருக்கிறார்கள்.
நோயுற்றவர்களைத் தாங்கிக் கொண்டும்,
நோயற்றவர்களைத் தாண்டிக் கொண்டும்
இடையில் அறையை நோக்கி
செலுத்தப்படும் ஒரு படுக்கை,
சக்கரங்களின் மேல் கிடத்தி
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு வலி நிறைந்த பை.
வலி நிறைந்த அந்த உடலிலிருந்து
அவ்வப்போது விசிறி எறியப்படுகிறது-சுற்றிலும்
பெருங்குரல்-கைதூக்கி-கைதூக்கி
அக்குரல் தடித்த பிசுபிசுத்த வெள்ளைக் கயிறென
மருத்துவ மனையின் சுவரெங்கும்
அறைந்து நீளமாக அப்பிக் கொள்கிறது.
சிலந்தி வலையென அந்தக் கயிறோ யார் கண்களுக்கும்
காதுகளுக்கும் எட்டாத அந்த ஒட்டும் ஒலிக்கயிற்றை
எல்லோரும் கடந்து கடந்து செல்கின்றனர்.
கைகளால் விலக்கி விலக்கி நோயுற்றவர்கள் வலியுடனும்,
நோயற்றவர்கள் அரோக்கியத்துடனும்.
அசையாது நிலையாக அந்த ஒலிக் கயிறு
அந்தரத்திலும் வலையென எழும்பி
சிக்கவைக்க முயல்கிறது.
கடக்கும் உடல்கள் சிக்காமல் ஊடுருவிச்
செல்கின்றன,
உலகமெங்கும்
உடல்கள், உடல்கள்...
5
வயதான வலி நிறைந்த பை ஒன்று
நெஞ்சைத் தடவியபடி-கண்களில்
மிரட்சியுடன் கட்டுண்டு கிடக்கிறது,
பயத்தில், சக்கர நாற்காலியில்.
ஓட்டி வரும் ஒருவருடன் இன்னமும் சிலருமாக ஒரு சிறு
கூட்டம் உள் நுழைய எத்தனிக்கிறது.
மருத்துவ மனையில்,
மருத்துவர் அறைக்குள்
காத்திருக்கும் பல வலிகள்
பலவிதம்,
வயதான உடலில் வலியுடன்
பயம் மீறுகிறது.
அலறத்தொடங்க ஆயத்தம் செய்கிறது உடல்.
பார்த்துப் பழகிப் போன ஓசைகள்
இவை, யாரையும் அசைக்கவில்லை.
உள் செல்ல சிறு கூட்டமும் உடன் செல்ல
நோய்ப் பைக்கும், உடன் ஒரு உடலுக்கும் மட்டுமே அனுமதி
மற்றவை மறுக்கப்படுகின்றன.
சற்றே விலகி இரும்
முறை வந்தபின்
உள் நுழைகிறது, வலியற்றும்
வலியுற்றும் இரு உடல்கள்.
இளைஞர் ஒருவன்
மிடுக்கான தோற்றத்தில்-சற்றே
தயங்கிய
நடையில், நல்ல தரமான உடையில்
காலணிகளும், கழுத்தில் கட்டப்பட்ட டையுடனும்.
உடன் ஒரு நண்பனுடனும், மருத்துவ மனையின்
உள் நுழைகிறார்கள், இந்த-சிறு
கூட்டத்துடன் இன்னமும் பலருடன்
இணைந்து காத்திருக்கிறார்கள்,
மருத்துவ மனையில், மருத்துவர் அறை வாயிலில்.
முறை வரும் வரை விளையாட்டு, அலுவலகம்,
வீடு, படித்தது, பிடிக்காதது
விரிவாக எல்லாவற்றையும்
பேச எண்ணினாலும் அவ்வப்போது -வலி
முகத்தில் சிறு சுழிப்பு
தெறிப்பு சட்டை பட்டன்கள் சற்றே
தளர்த்திவிடப்படுகின்றன.
எங்கும் நிறைந்திருக்கும்
காற்றை இன்னமும் கொஞ்சம்
உள்ளிழுக்கும் முயற்சியில்
ஆனாலும் கூட.
வயோதிக வலி நிறைந்த உடல் மருத்துவர் அறையில்
சிறு கூட்டமோ எதிர்பார்ப்பும் தவிப்புமாக
ஏதுமில்லை. வெற்று பயம். கொஞ்சம் வலியுடன் இணைந்தே.
ஆசுவாசம் வலிப் பையின் முகத்தில்
ஏமாற்றம் சிறு கூட்டத்தில்.
அடுத்து செல்ல வேண்டியது
ஷூவும் டையும் அணிந்த இளைஞன்
தன் நண்பனுடன் உள்நுழைய,
சில மணித்துளிகளில்
பரபரப்பு தொற்றிக் கொள்கிறது,
மருத்துவமனையில்
-மருத்துவர் அறையில்
செவிலியரும், மற்றவர்களும்
எல்லா பட்டன்களையும்
அவிழ்த்து விட்டு-நெஞ்சை நீவிக்
கொடுத்து, அழைத்துச் செல்கின்றனர்-சக்கர நாற்காலியில்
உடன் செல்லும் நண்பன் முகத்தில் கலவரம்.
யார் யாருக்கு சொல்ல வேண்டும்?
எந்த எந்த தொலைபேசி எண்கள்
மிக முக்கியமானவை?
ஏது அறியேனே? என் செய்வேன்?
வலியுடன் சேர்ந்த வேதனையும்
பயமும் அப்பிக் கொள்கிறது .
படுக்கை கொணர்ந்து கிடத்தி
செலுத்துகிறார்கள் உடலை
சக்கரத்தின் மீதாக
மருத்துவ மனையில், மருத்துவர் அறையிலிருந்து
மருத்துவ மனையில்
மருத்துவரின் அறையில்
மருத்துவ சீட்டுடனும் கூட-பயமும்
பயமின்மையும் பதட்டமும். ஏமாற்றமும்
சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது.
வயதின் எண்ணிக்கை எப்போதும்
எல்லா உயிர்க்கும் ஒன்றே போல
கூடிக் கொண்டே செல்கிறது.
ஏற்கனெவே கணக்கிட்டு வைத்திருக்கும்
காலங்களுக்கு ஏற்ப
மாதத்திலும், வருடத்திலுமாக
நம் அறிவுக்கு எட்டியபடி-ஆனால்
மரணம் மட்டும் வரிசையின் கதியை உடைத்து
காற்றைப் போல தன் விருப்பத்திற்கு
தேர்ந்தெடுக்கிறது உடல்களை.
நானோ எப்போதும் போல எல்லாவற்றையும்
பார்த்துக் கொண்டு இருக்கிறேன்
கையறு நிலையில்.
வீட்டு வன்முறையும், விபத்துக்களும்
யுத்தமும், சாதி-மதக்கலவரங்களும்
ஆணவமும், ஆசையும், இயற்கைப்
பேரழிவுகளும் கூட
வலியற்ற உடல்களை வலியுற்ற உடல்களாக,
வெற்று உடல்களாக மாற்றத் தயாராகிவிடுகின்றன.
அப்போது மருத்துவமனைகள்
நிரம்பி வழிகின்றன-போதிய
மருத்துவரும், மருந்துகளும் அற்று.
நோயற்ற நல் உடல்கள் வலியற்ற
திட உடல்கள் வலி நிறைந்து ஓலமிடும்
நோயுற்ற உடல்களாக மாற்றப்படுகின்றன,
வலிந்து ஒரே நேரத்தில்.
வலி நிறைந்த கூச்சல்களும், துர் நாற்றங்களும்
நிரம்பி வழிகின்றன,
காற்றைக் கிழித்துக் கொண்டு
எல்லா திசைகளிலும்.

FAIZA ALI'S POEM

A POEM BY 
FAIZA ALI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



I listened patiently

Instinctively cautious of not 

turning her 

spent out

I enquired just where it was 

quite a must

She was shedding all her pains

as teardrops.

Not just to assure her

that her secret would be safeguarded

the words spelt proved useful

I became the Mother Hen that shelters

the trembling chicken

hugging it close with the warmth of its

feathers

The screeching voice

that set afire all the walls of the cabin

slowly subsided.

What a calm; Calm Supreme

in those innocent eyes of child.

All that details uttered

through words

and body movements

and all that I have realized in those

sobs uncontrollable

my pen refuses to scribble

under any known grading categories


Never can I make an entry of

the nauseating aversions of

the grime of guardian turning into

demon

twining them with the

sweet smell of fresh jasmine.


(*Translator's Note _ சில தொழில்நுட்ப வார்த்தைகளுக்கான ஆங்கில இணைச்சொற்கள் பிடிபடவில்லை. ’தரவரிசை அளவீடுகள்’ போல். 



Aaliya Aaliya

May 18, 2018 •

வேலியே பயிரை மேய்தல்

சாவதானமாய் செவிமடுத்தேன்

களைப்படையச் செய்யக்கூடாதெனும்
உள்ளுணர்வின் தீவிரங்களோடு

தேவையான இடங்களில் மட்டுமே

 வினவினேன்.

அவள் தன் வலிகளை கண்ணீர்த் துளிகளாய்

 உதிர்த்திருந்தாள்

இரகசியம் பேணப்படும் என்பதை

 உணர்த்தமட்டும்

சொற்கள் பயன்படவில்லை

கொடுகும் கோழிக்குஞ்சைக்

கதகதக்கும் தன்னிறக்கையோடு

சேர்த்தணைக்கும் தாய்ப்பறவையாகிறேன்

அறைச்சுவர் முழுவதையும் தீய்த்தெறிந்த

 கீச்சுக்குரல்

மெல்லத் தணிந்தடங்கிற்று

எத்தனை அமைதி பேரமைதி

பளபளக்கும் அப்பிஞ்சுக்கண்களுக்குள்

சொற்களால்....

 உடல்மொழியால்....விபரித்தவைகளை....

இன்னும் விசும்பல்களில்.....

இடைவெளிகளை நிரப்பிக் 

கொள்ளுமளவிற்கு

நான் உணர்ந்தவைகளை

எந்தத் தரவரிசை அளவிடைகளூடும்

இட்டு நிரப்ப மறுக்கிறது என் பேனா

வேலியே பயிரை மேய்தலின்

அசிங்கங்களின் அருவருப்புகளை

ஈர மல்லிகையின் நறுமணங்களோடு

இணைத்துப் பதிவிட ஒருபோதும் என்னால்

 முடியாது .

கடல்முற்றம் - எஸ்.பாயிஸாஅலி
 — 

Comments



INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024