INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 5, 2025

G.ANANDHA PRABHU

A POEM BY
G.ANANDHA PRABHU

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Father should somehow wade through this night
His face reveals the weariness of too long
a run
With no wish to rise again
the hands remain withered
In the chest rising and falling
There sits invisible one’s final hour
On the other end of this long night
there stands with its cruel smile
Medicine’s deadline.
From somewhere has come into the room
a black-hued Butterfly.
My hope keeps seeping through
the corner of those eyes
whether they would open again
proving a million- dollar question.
Upon receiving the SMS
that all arrangements have been made
The brain starts calculating the expenses thereon
shocking the heart utmost
So as to save us from the sorrow
waiting outside the closed door
At the instant when I decided never to open it
The Butterfly flew through the window
afar
I turned not
Nor saw my Father anymore.

(*மூல கவிதையில் ‘நான் திரும்பி அப்பாவைப் பார்க்கவே யில்லை’ என்ற இறுதிவரி தரும் தூலமான திரும்பிப்பார்த்த லையும், இனி திரும்பவும் பார்க்கவே முடியாத நிலையையும் (கவிஞர் இந்த இரு திரும்புதலையும்தான் திரும்ப என்ற ஒரு வார்த்தையில் குறிப்புணர்த்தியிருப்பார். அப்படியில்லை யென்றாலும் என் வாசகப்பிரதி இந்த இரண்டு திரும்பிப் பார்த்தலையும் தான் அர்த்தங்கொள்கிறது என்னும்போது மொழிபெயர்ப்பிலும் அதைக் கொண்டுவரவே விழைந்தேன். அதைக்கொண்டுவர முயன்றிருக்கிறேன். அதனாலேயே இறுதிவரிகளின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் விளக்கவுரை போலும் அமைந்திருக்கக்கூடும்.

இந்த இரவை
அப்பா கடந்தாக வேண்டும்.
நீண்ட ஓட்டத்தின்
களைப்பு முகத்தில் தெரிகிறது.
மீண்டெழ விருப்பமற்றதாய்
கரங்கள் துவண்டிருக்கின்றன.
மேலுங்கீழுமாய் ஏறியிறங்கும்
மார்பில் அரூபமாய் அமர்ந்திருக்கிறது
அந்திமம்.
இந்த நீள்இரவின் மறுமுனையில்
மருத்துவத்தின் காலக்கெடு
குரூரப்புன்னகையோடு நிற்கிறது.
எங்கிருந்தோ அறைக்குள் நுழைந்திருக்கிறது
கருநிற பட்டாம்பூச்சி ஒன்று.
இனி திறக்குமா எனத்தெரியாத
அந்தக்கண்களின் ஓரத்திலிருந்து
என் நம்பிக்கை கசிந்து கொண்டே இருக்கிறது.
ஏற்பாடுகள் தயார் என்று
குறுஞ்செய்தி வருகிற நொடியில்
செலவினங்களை கணக்கிடும் மூளையைக்
கண்டு அதிர்ச்சியுறுகிறது மனம்.
சாத்தப்பட்ட கதவிற்கு வெளியே
நிற்கும் துயரத்தின் பொருட்டு
கதவைத் திறக்கவே கூடாதென
நினைத்த நொடியில்
சாளரத்தின் வழியே வெளியேறிப்
பறந்தது அந்த பட்டாம்பூச்சி.
நான் திரும்பி அப்பாவை
பார்க்கவே இல்லை.
கௌ_ஆனந்தபிரபு
s

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET

  INSIGHT - JANUARY - - MARCH 2025 PARTICIPATING POET