INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, May 31, 2022

NESAMITRAN

 A POEM BY

NESAMITHRAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

When a new love blossoms
at the first ring the call is answered.
As if the next day a Sunday
Even at the hour well past midnight
WhatsApp’s blue tick shines instantly.
It doesn’t bang the doors on our earlobes
announcing
‘Number is busy’
Please hold on
Or call after sometime’
With the green light glowing
Not knowing how to start the conversation
Sending a goodnight message
and giving the reason
‘I had slept off’
ask for a response the next morn.
During the initial stages of a new association
No one is busy.
Even when in remote mountain region
having signal problem
the voice message would be promptly delivered.
SMS would be able to stretch its hand
And reach you wherever you are
Phantom vibration syndrome
Wouldn’t be there.
Those who understand silence better than words
don’t leave a ‘status’.
Unable to find a way
to access a love that remains
new for ever
The feet that go to the church
eat the sand as a calf
In the church
kneeling down it applies cross
across its chest
haphazardly.
It is all mangled
as the body with the skin peeled off
by one who knows not how to kill
With the breath smelling ashes
all over
it waits; awaits….
At the start of a new association
None is ever busy.

ஒரு புதிய அன்பு மலரும்
காலத்தில்
முதல் ரிங்கில் போன் எடுக்கப்படுகிறது
மறுநாள் ஞாயிறு போல்
பின்னிரவு தாண்டியும் வாட்ஸ்அப்
ப்ளூ டிக் உடனடியாக ஒளிர்கிறது
வேறு ஒரு அழைப்பில்
இருக்கிறார் .காத்திருக்கவும்
அல்லது பின்னர் அழைக்கவும்
என்ற குரல் செவிட்டில் அறைந்து
கதவு சாத்துவதில்லை
ஆன்லைன் பச்சை விளக்கு எரிய
என்ன சொல்லி உரையாடலை
துவக்குவது எனத் தெரியாமல்
குட்நைட் என்று அனுப்பி விட்டு
அப்படியே உறங்கி விட்டேன்
என்று மறுநாள் பதில் கேட்க
வேண்டியதில்லை
ஒரு உறவு துவங்கும் காலத்தில்
யாரும் பிசியாய் இருப்பதில்லை
சிக்னல் கிடைக்காத மலைப் பிரதேசத்திற்கு போனாலும்
வாய்ஸ் மெசேஜ் டெலிவரி
ஆகிவிடும்
SMS க்கு நீங்கள் இருக்கும்
திசைக்கு கை எட்டும்
Phantom vibration syndrome
வராது
வார்த்தைகளை விட
என் மௌனத்தை புரிந்து
கொள்பவர்கள்... - status
வைப்பதில்லை
எப்போதும் புதிதாய் இருக்கும்
ஒரு
அன்பை அடையும் வழி
தெரியாமல்
கன்றுக்குட்டி போல் மண்ணைத் தின்கிறது
கோவிலுக்கு போகிற கால்கள்
சர்ச்சில் மண்டியிட்டு தப்புத் தப்பாய்
சிலுவை போட்டுக் கொள்கின்றன
கொல்லத் தெரியாதவன்
கையில் தோலுரிக்கப்படும்
உடலாய் சீரழிகிறது
மூச்செல்லாம் சாம்பல் மணக்க
காத்திருக்கிறது
ஆம்
ஒரு
உறவு துவங்கும் காலத்தில்
யாரும் பிசியாய் இருப்பதில்லை

நேச மித்ரன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024