A POEM BY
S.J.BABIYAN
Human emotions lay scattered
Emerging out of the lot I stand
Faraway
the tree and the crow
and the fox standing beneath
are seen.
The raging lions that befriended one another
believing the words of fox
glared furiously.
There remained still
the ‘Vadaa’ in crow’s mouth!
The fox stood there waiting for a sweet song.
Expectation for relishing the Vadaa in full
everyone nurtured.
The crow appearing rapturous
being eulogized by the fox
In the mouth that cherished life
as the slipping Vadaa
with saliva oozing
and dripping on the land
the unscrupulous ones lying in wait
for a lone drop
turned frantic and distressed.
Holding the Vadaa between its feet
the crow cawing as usual
the fox was fooled as before.
The ants all over the mountain
began collecting and eating the particles of Vadaa
that the crow’s toes had scratched
and caused to scatter.
செ.ஜெ பபியான்
•
வீதி எங்கும்
மனித உணர்ச்சிகள்
சிதறி கிடந்தன..
அதிலிருந்து எழுந்து
நிற்கிறேன்.
தூரத்தில்
மரத்தில் காகமும்
கீழே நரியும் இருப்பது
தெரிகிறது.
நரியின் பேச்சை
நம்பி தோழமை கொண்ட
சீறும் சிங்கங்கள்
சீற்றத்தோடு முறைத்து பார்த்தன.
காகத்தின் வாயில்
இன்னும் இருந்தது வடை!
அழகிய பாடலுக்காய் காத்திருந்தது நரி
முழு வடையை குறித்து எதிர்பார்ப்பு
எல்லோருக்கும் இருந்தது.
நரி புகழுரையில்
காகம் மயங்கியது போலிருக்க
தவறி விழுந்திடும்
வடையென
ஜீவன் காத்த வாயில்
எச்சில் வடிந்து
நிலத்தின் மீது விழ
ஒற்றைத் துளிக்காய்
பார்த்திருந்த பதர்கள்
பதறி தவித்தன.
காலில் வடை வைத்து
காகம் எப்போதும் போல
கா... கா.. என கரைய
வழமை போன்று
ஏமாந்தது நரி
காகத்தின் விரல் கீறி
சிந்திய வடையின்
துகள்களை
பொறுக்கி தின்னத் தொடங்கின
மலை எங்கும் வியாபித்திருந்த எறும்புகள்.!
No comments:
Post a Comment