INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, July 3, 2024

THEEPIKA THEEPA

 A POEM BY

THEEPIKA THEEPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

ANANDAN ALSO HAD A LIFE OF HIS OWN


Anandhan who comes to the street corner tiny shop
With Tyre and Stick
_ He too had a life of his own.
Inside the eyes of he
who laughs
with pin-stuck pants and
and cat-fur back
there was the pride of a car.
He who buys Sugar for five rupees
and ‘Silk-Muttai Sambo’ for fifty paise
buys a Kadapi sweet for the remaining coins
and burying it inside his cheek
would fly off
His daytimes spent in catching the dragonflies
and making them fly with a thread tied
Catching the crow
and tying soda-bottle lid on it and letting it fly
What would those hours do for his hunger?
They threw stones at the unripe mangoes
stealthily.
His mother who
after hours of cutting grass
returning home late
with twenty rupees in hand
would shake off the cat lying there
and lighting the stove
would cook and give him boiled rice.
Neither he who went to the High School
barefoot
nor his family
had any dreams
about Education.
Hunger
It is shrouding themselves in hunger
that they all lay spread out as ever.
For those little children famished
growing in the sun
God has not been unfair
giving ailments grave.
The daily-wager father
who covers with sack his children
sleeping in the all too tiny
hut
throughout the night
is afflicted by the ulcers of
tomorrow’s hunger.
Even today
remains the same
Anandhan’s hut
with no Anandhan in it.
Theepika Theepa
ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது.
-----------------------------------------------------------
ரயறும், தடியுமாக
பெட்டிக் கடைக்கு வருகிற
ஆனந்தனுக்கும் ஒரு வாழ்விருந்தது.
ஊசி குத்திய காற்சட்டையும்,
பூனை மயிர் முதுகுமாய் சிரிக்கிறவனின்
கண்களுக்குள்
ஒரு காரின் பெருமிதமிருந்தது.
ஐஞ்சு ரூபாய்க்கு சீனிச் சரையும்
ஐம்பது சதத்துக்கு
சில்க் முட்டைச் சம்போவும்
வாங்கிக் கொண்டு போகிறவன்,
மிச்சப் பத்துச் சதத்துக்கு
ஒரு கடாபி இனிப்பு வாங்கி
கொடுப்புக்குள் புதைத்துக் கொண்டு
பறந்து போவான்.
தும்பிகளைப் பிடித்து நூல் கட்டிவிடுவதும்,
காகத்தைப் பிடித்து
சோடாமூடி கட்டி விடுவதுமாய் கழிந்த
அவன் பகல்கள்
பசிக்கு என்ன செய்யும்?
கள்ள மாங்காய்களுக்கு கல்லெறிந்தன.
புல்லுப் பிடுங்கி விட்டு,
இருபது ரூபாவோடு
பின்னேரம் வீட்டுக்குப் போகிற
அவனின் தாய் தான்,
பூனை கலைத்து அடுப்பு மூட்டி
கொதிசோறு கொடுப்பாள்.
வெறுங்காலோடு போய்
மகா வித்தியாலத்தில்
படித்து விட்டு வந்தவனிடமும் சரி,
குடும்பத்திடமும் சரி
கல்வி பற்றி
எந்தக் கனவுமே இருந்ததில்லை.
பசி.
பசியை சுற்றிக் கொண்டு தான்
அவர்கள் படர்ந்து கிடந்தார்கள்.
குஞ்சும், குறுணியுமாய்
வெயிலுக்குள் வளர்ந்த பிள்ளைகளுக்கு
நோயென்று பெரிதாய்
வஞ்சம் வைத்ததில்லை தெய்வம்.
பொட்டுக் குடிசைக்குள்
ஒட்டிக் கொண்டு தூங்குகிற
தன் குழந்தைகளுக்கு
சாக்கைப் போர்த்தி விடுகிற
நாட்கூலித் தகப்பனுக்கு
இரவெல்லாம்
நாளைய பசியின் கொப்பளங்கள்.
இன்றைக்கும்
அப்படியே தானிருக்கிறது
ஆனந்தனில்லாத ஆனந்தன் வீடு.
------ xxx -------
தீபிகா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024