INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, September 16, 2024

SHANMUGAM SUBRAMANIAMQ

A POEM BY
SHANMUGAM SUBRAMANIAN



Transalted into English by latha Ramakrishnan(*First Draft)





















Come! Come! The loneliness of Old Age_ Thee I welcome!
With uncontaminated joy Hailing your invaluable beauty I welcome thee wholeheartedly!
Just as Old Age For aloneness also I find not any reasons rigidly defined.
I am all for hugging all the beauties
unparalleled of you steeped in reality; so true.
I have built fences against imaginations running riot Denying them entry inside In every sense.
Accepting it with fortitude I have resolved to make peace with thee.
Let us reach our journey’s happy end Yes, my friend! * Here, a little away My better-half sitting in a back-bent easy chair Is listening to the election news. Cursing somebody in her own way “Oh, no – damn these fellas! See the way they change colours for money and power – Alas!”
As usual, I leaning against the wall immersed in the Sudhas story, the seventh one of Rahul Sankrityayan’s ‘From Volga to Ganga’ that keeps on expanding in width and depth the more you read it page after page _
What more is needed in this old age which is untouched by loneliness at any stage.

 

வருக! வருக!
முதுமையின் தனிமையே!
உமக்கு நல்வரவு!
மிக்க மகிழ்வுடனும்
உங்களின் விழுமிய அழகை விரும்பியும்
நிறைந்த உணர்வுடன் வரவேற்கிறேன்.

முதுமையைப் போலவே தனிமை என்பதற்கான
வரையறுக்கப்பட்ட
ஏது காரணங்களும் தென்படவில்லை எனக்கு.

யதார்த்தத்தில்
மூழ்கிக் கிடக்கும்
தங்களின்
ஆகச் சிறந்த அழகுகளை முழுதுமாய்
அரவணைத்துக்
கொள்ளவே விருப்பம் கொண்டுள்ளேன்.

கற்பனைகளுக்கு
வேலி அமைத்துவிட்டேன்
உள்ளே நுழையாதபடிக்கு.

ஓர்மையுடன் ஏற்று
உங்களோடு சமரசம் செய்துகொள்வதெனத்
தீர்மானித்திருக்கிறேன்.

நாம் நமது மகிழ்ச்சியான
பயண இலக்கினை அடைவோம்.
சரிதானே?
*
இதோ
சற்று தள்ளி,
என் துணைவியார்
முதுகு வளைந்த ஈஸிசேரில்
அமர்ந்தபடிக்கு
தேர்தல் செய்திகள் கேட்டுக்
கொண்டிருக்கிறார்.
" அசிங்கம் புடுச்சவனுக காசுக்காக இப்படியா மாறுவானுக?"
என்று யாரையோ திட்டியபடிக்கு..........

வழக்கம்போல
நான்
சுவரில் முதுகைச் சாய்த்துக்கொண்டு,

வாசிக்க வாசிக்க
இன்னும் இன்னும்
ஆழமாய்
விரிவடைந்து கொண்டிருக்கும்
ராகுலசாங்கிருத்யாயனின்
"வால்காவிலிருந்து கங்கை வரை" நூலின்7-ஆவது கதையான
"சுதாஸ்"-கதையின் பக்கங்களில்
மெய்மறந்திருக்கிறேன்.

வேறென்ன வேண்டும் இந்தத் தனிமையணுகா முதுமையில்
இதைவிட......




No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024