INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

ADHEEDHAN SUREN

 A POEM BY

ADHEEDHAN SUREN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE PLAYGROUND
(1)
He who goes on
with no care in the world
whistling and viewing the sky
when pausing and casting a backward glance
chanced to see that Being’s eyes
looking so straight.
Though they are to alight
at some stop
of the ongoing journey
which has begun well beyond Time Immemorial
their wagon speeds past without halting.
He who tries to escape from its eyes that pierce his skin
I remember seeing umpteen number of times
in the looking glasses.
The countenance of the owner of the fingers
holding the edge of the chain clasped around the neck
of that which chases incessantly.
Eating away the clothes of
He who keeps running
shedding off his attires one by one
it pursues him as the ring of inescapable curse.
Coming close to him crouching
at the height of fear
with no way out
and staring at him who is ping the chain
with position changed
staring at him _
the meaning of the sarcastic laugh
seen on its lips
deciphered
the path unravels.

(2)

On the other side of this towering compound wall
there is a playground
Controlling its heart that is stirred a lot
hearing the hues and cries of those
daily visitors
when it tries to sleep focused
within the dream are slowly heard
the dos and don’ts of a game hitherto unknown.
When the container with dust
that come floating in the air collected
brims and overflows
comforting those who want not
to be the ball being kicked
nor bat that hits
or the net in the court
nothing of this sort
but nurturing the weird desire
of becoming the floor
to turn into the floor of the playing ground
and keep waiting day after day
and for the opportune moment
brimming and overflowing
the resounding bell heard afar
coming in the way
in the ground where those
in front of the compound wall
unable to ever enter inside _
who have taken a print out and
preserved the laughing face drawn on the ball
that lands from nowhere
games aplenty are being played
non-stop.

(3)
None seemed to have noticed the man who sits there
saying nothing
just like that statue that
keeps watching in silence
all that are taking place.
As an ace photographer
who clicks everything
with his head raised as he goes on
closing and opening his eyes
stills accumulate.
Calling him who is forever engaged
in the game of finding the old one
in hiding inside the new ones
piling up
the voice pleading for inclusion in the game
being heard by him alone
slowly turning towards that direction
and smiling
the statue winks and laughs
in response.


விளையாட்டு மைதானம்
(1)
எவ்விதக் கவலைகளுமின்றிச் சீழ்க்கையடித்தபடி
வான்பார்த்து நடந்துசெல்பவன்
நிதானித்துத் திரும்பிப் பார்க்கையில்
அவ்வுயிரின் கண்களை
நேருக்குநேர் சந்திக்க நேரிடுகிறது
எப்போதென கணிக்க இயலாத
காலத்திற்கு முன்பிருந்தே
தொடர்ந்து கொண்டிருக்கும் பயணத்தின்
ஏதோவொரு நிறுத்தத்தில்
இறங்கவேண்டியவர்களாயினும்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்களின் வாகனம்
உடலைத் துளைத்திடும் பார்வையிலிருந்து
தப்பிக்க முயல்பவனை விடாது துரத்திடும்
அதன் கழுத்தில் மாட்டப்பட்டிந்த
சங்கிலியின் முனையைப் பிடித்திருக்கும்
விரல்களுக்குச் சொந்தக்காரனின் முகத்தை
இதற்குமுன் பலமுறை
கண்ணாடிகளில் பார்த்த ஞாபகம்
உடையினை ஒவ்வொன்றாய்க் களைந்தபடியே
ஓடிக்கொண்டிருப்பவன்
அவிழ்த்தெறிந்த ஆடைகளைத் தின்றபடியே
மீளமுடியாச் சாபத்தின் கண்ணியாய்
பின்தொடர்கிறது
இனி வழியேதுமில்லையென
பயத்தின் உச்சத்தில் உடலொடுங்கிக்
குன்றியவனின் அருகில் வந்து
இடம்மாற்றிய
சங்கிலியைப் பற்றியவனை
விழிகளால் வெறித்துப் பார்க்குமதன்
இதழில் தெரிந்த ஏளனச் சிரிப்பின்
அர்த்தம்புரிந்திட
திறந்துகொள்கிறது பாதை.
(2)
நெடிதுயர்ந்த
இம்மதிலுக்குப் பின்னே இருக்கிறது
ஒரு விளையாட்டு மைதானம்
தினமும் வருபவர்களின்
கூச்சல்களும் இரைச்சல்களும்
செவிகளில் விழும்போதெல்லாம்
பரபரக்கும் மனதைக் கட்டுப்படுத்தி
கவனம் சிதறாமல் உறங்க முயல்கையில்
கனவுக்குள் மெல்லக் கேட்கிறது
இதுவரை அறியப்படாத விளையாட்டின்
விதிமுறைகள்
உதைபடும் பந்தாகவோ
அடித்திடும் மட்டையாகவோ
இடையிலிருக்கும் வலையாகவோ
எதுவொன்றாகவும் இல்லாமல்
மைதானத்து நிலமாக இருக்க விரும்பும்
விநோத ஆசையோடு
நிதமும் தருணத்தை எதிர்பார்த்துக்
காத்திருப்பவர்களுக்கு ஆறுதலெனக்
காற்றில் மிதந்து வரும் தூசிகளைச்
சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்
நிரம்பி வழிகையில்
தூரத்தில் ஒலித்த மணியோசையால்
சிந்தை மீண்டு தலைதிருப்பிட
எங்கிருந்தோ வந்து விழும்
பந்தொன்றில் வரையப்பட்டிருக்கும்
சிரிக்கும் முகத்தைப் பிரதியெடுத்து
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
மதிலுக்கு முன்னிருப்பவர்களால்
ஒருபோதும் போகமுடியாத மைதானத்தில்
தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன
எண்ணற்ற விளையாட்டுகள்.
(3)
நிகழ்ந்து கொண்டிருக்கும்
யாவற்றையும் பார்த்தவாறே
அமைதியாய் இருக்கும்
அச்சிலையைப் போலவே எதுவும் பேசாமல்
ஒரு ஓரமாய் உட்கார்நிருப்பவனை
யாரும் கவனித்ததாய்த் தெரியவில்லை
அனைத்தையும் படம்பிடிக்கும்
தேர்ந்த புகைப்படக் கலைஞனைப்போல
தலையை உயர்த்தி
கண்களை மூடிமூடித் திறக்க
சேகரமாகின்றன புகைப்படங்கள்
குவியத்தொடங்கிய புதியனவற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
பழையவைகளைக் கண்டுபிடிக்கும்
ஒருபோதும் அலுத்திடாத விளையாட்டில்
ஈடுபட்டிருப்பவனை அழைத்து
தன்னையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி
இறைஞ்சும் குரல் அவனுக்கு மட்டுமே கேட்டிட
மெல்ல அத்திசைநோக்கி
திரும்பிப் பார்த்து சிரித்தவனுக்குப் பதிலாய்
ஒற்றைக்கண் சிமிட்டி நகைக்கிறது சிலை.

அதீதன் சுரேன்





No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024