INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

MISBAH UL HAQ[2 POEMS]

TWO POEMS BY
MISBAH UL HAQ
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. WARTIME ISOLATION

In wartime isolation
I was searching for the point of fear
I have heard the fingers buried in the
shudder of muscles
speaking of how they shroud themselves with fear.
That the primal night of the wizard
having lost the power of alchemy
is still stretching all the while trembling
a note you have concealed in a tale of
the bygone era.
In wartime isolation
silences don’t send chill down our spine.
Black-soaked darkness ceases to terrorize us
Amidst the wails and screams heard afar
Fear is still lurking somewhere
Shivers and shudders too.
In wartime isolation
the weeping prayer slowly seeping
this aloneness keeps telling.

போர்க்காலத்தின் தனிமையொன்றில் –
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
பயத்தின் புள்ளியை தேடிகொண்டிருந்தேன்…
பயம் தன்னை உடுத்திக்கொள்ளும் மாயை பற்றி
தசைகளின் நடுக்கத்தில் புதைந்த விரல்கள் சொல்லக் கேட்கிறேன்.
ரசவாதம் தொலைத்த வித்தைக்காரனின் ஆதி இரவு
இன்னும் நடுக்கத்தில் நீள்வதாய் ஒரு குறிப்பை
பழங்கால கதையொன்றில் புதைத்து வைத்திருக்கிறாய்…
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
நிசப்தங்கள் நம்மை பயமுறுத்துவதில்லை…
கருமை அடர்ந்த இருள் நம்மை பயமுறுத்துவதில்லை…
தூரத்தில் எழும் ஓலங்களுக்கு நடுவில்
இன்னும் பயம் எங்கோ மறைந்திருக்கிறது…
தூரத்தில் எழும் குழந்தையின் கதறலில்
இன்னும் நடுக்கம் எங்கோ மறைந்திருக்கிறது…
போர்க்காலத்தின் தனிமையொன்றில்
ஒரு விசும்பும் பிரார்த்தனை மெல்ல கசிவதை
இந்த தனிமை சொல்லிக்கொண்டிருக்கிறது.

மிஸ்பாஹுல் ஹக்


[2]

Only he who struggles with all his might to spring up unleashed
is able to run again Or at least move a little.
Life doesn’t offer one and all
All things in abundance
Whoever wants whatever
that make him feel fulfilled
when he goes seeking for it and strives to get it
He accesses it
Or the charm of it coming to him on its own
happens.
Have you seen the eyes of those who are afraid to face Life?
They would surely be having reasons for all their inabilities
When they fail to get hold of some reason they point at Gods
conveniently
They would screech
for things beyond their reach
he who is on the move always
with well entrenched prayers leading the way
would have gone past the Divine Life Force
which is the very source of cosmos
and would have arrived at an altogether impossible
destination
Admiring all things exquisitely magical
happening around him
he would keep them a secret for all time
to come.

Misbah Ul Haq

திமிறி எழுமுனைகிறவனால் மட்டுமே மீண்டும் ஓட முடிகிறது,
அல்லது கொஞ்சமேனும் நகரமுடிகிறது...
வாழ்க்கை அப்படி எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரிக்கொடுத்துவிடுவதில்லை..
எவனுக்கு எது தேவையோ, எது திருப்தியோ அதை நாடி தேடி முயலும்போது அதை அவன் அடைந்துக்கொள்கிறான்,
அல்லது அதுவாக அவனை வந்துசேரும் மாயம் நடந்துவிடுகிறது..
வாழ்வைப் பார்த்து அஞ்சுபவர்கள் கண்களை தரிசித்திருக்கிறாயா..
எல்லா இயலாமைகளுக்கும் அவர்களிடம் காரணங்கள் இருக்கும்..
காரணங்கள் இல்லாதபோது கடவுள்களை கைகாட்டுவார்கள்..
தனக்கு கிடைக்காத எல்லாவற்றிற்கும் கூச்சலிடுவார்கள்..
ஊறிப்போன பிரார்த்தனைகளின் மீது, இயங்கிக் கொண்டே இருப்பவன், முயன்றுக் கொண்டே இருப்பவன்
பிரபஞ்ச சக்தியின் மூலம்என்கிற இறை ஜீவ சக்தியை கடந்தே ஒரு அசாத்தியமான முடிவிடத்தை அடைந்திருப்பான்..
அவனை சூழ்ந்து நடக்கும் மாயாஜாலங்களை அவன் வியந்து பின் ரகசிமாகவே வைத்திருப்பான்..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024