A POEM BY
YAVANIKA SRIRAM
under the bridge
crocodiles go swimming
Space Time surrounding
In the consent for the first ever kiss
The journey has stretched real long
Moreover that road proceeds cleaving a hillock
We have left behind Love in the city-dwelling
forgetfully.
There the ducks have hatched eggs.
Now we place our ears on the hot belly
Hills shudder
The mouth of the lime liquefied widens
In the rain gauge several millimeters rising
with their statistical data
The number of ducks
all things residual
Well, right from the first kiss
or from History itself
we have left out too many.
Fastening a chain round my grinder’s neck
I took it for a walk.
En route there was one squatting with the power loom
He who had come with Poclain digging mine
was examining a few broken teeth
on its countenance
In front
a woman carrying a mixie cool mixer
and also dragging washing gadgets crossed me
sweating,all too hastily.
With mobiles some were leisurely shifting the leg
and chatting.
Diesel cars have blocked that early morn
Suddenly my grinder screamed like one facing demon
and began running pulling the chain along
Forty-five minutes
As usual the sun swirling its wheel of teeth and ascending
A person who had come swaying both his hands
went screaming in lightning speed
on the conveyor belt
that had hauled and folded him,
with the floor and all.
கைமறதிகள்
1
பாலத்திற்கடியில் முதலைகள் நீந்திச்செல்கின்றன
இடம்காலம் சுற்றுப்புறம்
முதல் முத்தத்தின் அனுமதியில்
பயணம் இன்னும் வெகுநீளமாகி இருக்கிறது
மேலும் அந்த சாலை ஒரு சிறு குன்றைப்பிளந்து செல்கிறது
நாங்கள் காதலை கைமறதியாய் நகரத்தின் வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டோம்
அங்கே வாத்துகள் முட்டையிட்டிருக்கின்றன
இப்போது வெப்பமான அடிவயிற்றின் மீது காதுகளை வைக்கிறோம்
குன்றுகளில் நடுக்கம்
நீர்க்கும் சுண்ணங்களின் வாய் அலர்கிறது
மழை மானியில் வழக்கமான சில மில்லி மீட்டர்கள்
அதன் புள்ளிவிபரங்களோடு மேலதிகம் நிகழ்ந்ததை
வாத்துகளின் எண்ணிக்கையை எஞ்சியவற்றை நல்லது முதல் முத்தத்தில் இருந்து அல்லது வரலாற்றினின்றும் பலதையும் கழித்துவிட்டோம்.
2
என் அரைவை இயந்திரத்தின் கழுத்தில் சங்கிலி இணைத்து நடைபயிற்சிக்கு அழைத்துசென்றேன்
வழியில் பின்னலாடை இயந்திரத்துடன் ஒருவர் குத்திட்டு அமர்ந்திருந்தார்
சுரங்கம் தோண்டும் பொக்லைனுடன் வந்திருந்தவர் அதன் முகத்தில் உடைந்த சில பற்களைப்பார்வையிட்டுக்
கொண்டிருக்க
எதிரே ஒரு மிக்ஸி குளிர் சாதனத்தோடு
துவைக்கும் கருவிகளையும் இழுத்துக்கொண்டு வந்த பெண்மணி மூச்சிரைக்க வியர்வையுடன் அவசரமாய்க் கடந்துபோனார்
கைபேசிகளுடன் சிலர் சாவகாசமாய்க் கால்மாற்றிபேசிக்கொண்டிருந்தார்கள்
அவ்வதிகாலையை அடைத்துக்கொண்டு விட்டன டீசல் கார்கள்
இதற்குள் என் அரைவை இயந்திரம் பேயைக்கண்டதுபோல இரைந்து பிடியை இழுத்துக்கொண்டு ஓடத்துவங்கியது
முக்கால் மணிநேரம்
வழக்கம்போல் சூரியன் தன் மஞ்சள் நிற பற்சக்கரத்தை சுழற்றியவண்ணம் மேலேற
வெறும் கைவீசி நடந்து வந்த ஒருவர் தன்னை தரையோடு வாரிச்சுருட்டிய கன்வேயர் பெல்ட் மீது ஓவென அலறியபடி படுவேகமாகப் போய்க்கொண்டிருந்தார்
No comments:
Post a Comment