INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, November 8, 2020

DEEN GAFFOOR'S POEM

 A POEM BY

DEEN GAFFOOR


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



There was a time
My Son
Do you know
Don’t take this to be just another tale
like The Crow and the ‘Vada’
It was a story having real depth.
Let me tell
(at that time
will there be teeth
will words speak
with grey hair and shrunken skin
I would be in a different get-up)
(Tale)
Throughout the world bird of a lone breed flew
wandering round and round, My Son
The Lord had not trained them to take shelter in trees.
They knew not the joy of building nest.
Taking shelter in his hands as branches
slowly so softly arriving at his nose
trickling in his throat rubbing against it
within a few days
flying into his lungs
Inside that deeming it to be its lifetime habitat
multiplying its tribe
devouring man and turn him dead
minuscule bird invisible to the eyes.
Thousands of lives they had divided
between earth and fire
and vanished.
The story will continue….
In this tale
Interesting things abound.
After my demise
this tale
would be written, My son.

Deen Gaffoor.•

ஒரு காலம் இருந்தது
மகனே
தெரியுமா உங்களுக்கு
காகமும் வடையும் கதையைப்போல நினைக்காதீர்கள்
அது பெரிய ஆழமான கதை
சொல்கிறேன்.
(அப்போது
பற்கள் இருக்குமா
சொற்கள் பேசுமா
நரை திரையென
வேறொரு கோலத்தில் இருப்பேன்).
(கதை)
உலகம் முழுக்க ஓரினப் பறவைகள் பறந்து திரிந்தன மனே
மரங்களில் தங்கி வாழப் பழக்கவில்லை கடவுள்
கூடு கட்டிய மகிழ்வும் அதற்குத் தெரியவில்லை
செய்வதறியாது
மனிதனை இனங்கண்டு துரத்தின
கிளையென அவன் கரங்களில் தங்கி
மெல்ல மெல்ல
அவன் நாசியை அடைந்து
தொண்டையில் சொண்டுரசி
சில தினங்களுக்குள்
சுவாசப் பைக்குள் பறந்து
அதற்குள் வாழ் நாள் கூடென
இனம் பெருக்கி
மனிதனையே உண்டு கொல்லும்
விழிகளில் படாத நுண்ணுயிர்ப் பறவை.
பல்லாயிரம் மனித உயிர்களை
அப்படியே
மண்ணுக்கும்
நெருப்புக்கும்
பங்கிட்டு மறைந்தன.
கதை தொடரும்......
இந்தக் கதைக்குள்
சுவாரஷ்யங்கள்
நிறைந்து கிடக்கின்றன
எனது அந்திமத்துக்குப் பின்னால்
இந்தக் கதை
எழுதப்படும் மகனே.
#
டீன் கபூர்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024