A POEM BY
THARMINI
The canal runs elongating
to join River Seine.
With trees towering on both sides
Grass and flowers on the banks
Shadows falling into the water
in bluish green
Sparrows reveling in sunshine
Radiant sky
En route
Legs find out a day exclusively mine
Panting a woman runs past me
Bait in the hands of an old man
He was trying to catch the fish called peace.
Sitting on the lawn four enjoy a drink.
A dog runs around in gay abandon
Looking at their reflections in the stream
a pair in a wooden chair.
In their hands Love flutters.
An artiste wearing a colourful hat
eyes half-closed
start playing the guitar.
With eyes clicking all and more
a woman walks on
with a lilting gait.
Tharmi Ni
செய்ன் நதியோடு கலக்க
நீண்டு ஓடுகிறது கால்வாய்.
நெடுநெடுத்த மரங்கள் நிற்க
கரைகளில் புற்களும் பூக்களும்.
நீலப்பச்சை நிறத்து நீரில் விழும் நிழல்கள்.
வெப்பக் கதிரில் விளையாடும் குருவிகள்.
வெளிச்ச வானம்.
போகும் பாதையில்,
எனக்கான நாளொன்றைக் கால்கள் கண்டு பிடிக்கின்றன.
மூச்சு வாங்கியபடி ஒருத்தி
என்னை ஓடிக் கடக்கிறாள்.
முதிய மனிதனின் கைகளில் துாண்டில்
அமைதியென்ற மீனைப் பிடிக்க முனைகிறான்.
நால்வர் புற்தரையில் அமர்ந்து மதுவருந்துகிறார்கள்.
நாயொன்று சுதந்திரமாக ஓடித்திரிந்து மகிழ்கிறது.
தண்ணீரில் தெரியும் தம் விம்பங்களை பார்த்தபடி மர இருக்கையில் இருவர்.
அவர்களது கைகளில் காதல் படபடக்கிறது.
பல நிறங்களாலான தொப்பியோடு கலைஞனொருத்தன் கண்கள் செருகியபடி
கிட்டாரை மீட்டத்தொடங்குகிறான்.
எல்லாவற்றையும் படம் பிடிக்கும் கண்களோடு
பெண்ணொருத்தி துள்ளி நடக்கிறாள்.
No comments:
Post a Comment