A POEM BY
NEDUNTHEEVU NETHAMOHAN
a dilapidated existence
and a lovely doll’s presence
came my way.
Its face revealed the anguish of
leaving the comforting embrace of
a child’s hands.
Wonder what these dolls have
dearer than the mother’s embrace.
Children hug them with so much love and grace
None takes care of anyone
the way dolls are looked after by children.
More than you enthralling gods
The children enchant their dolls.
In the world of children
Dolls are kids.
Even the hearts of those dolls
lost and gone astray
have love in abundance
The dolls in the shops are waiting
for the toddlers.
You buy mere dolls
But the kids receive them
As babies real and wholesome.
நெடுந்தீவு நேதாமோகன்
நான் வாடகை வீடொன்றுக்கு
இடம் மாறியபோது பாழடைந்த வாசமும்
அழகிய பொம்மை ஒன்றும் கிடைத்தது
எனக்கு
யாரோ ஒரு குழந்தையின் அரவணைப்பில்
இருந்து தவறிய சோகம் இருந்தது
அதன் முகத்தில்
இந்த பொம்மைகளிடம் அப்படி
என்னதான் இருக்கிறதோ
தாயின் அணைைப்பைக் காட்டிலும்
குழந்தைகள் பொம்மைகளை
அவ்வளவு பிரியத்தோடு அனைத்து
கொள்கிறார்கள்
பொம்மைகளை பார்த்துக்கொள்ளும்
குழந்தைகள்போல்
யாரும் யாரையும் பார்த்துக்கொள்வதில்லை
நீங்கள் கடவுளை பரவசப்படுத்துவதை விட
குழந்தைகள் பொம்மைகளை
பரவசப்படுத்துகின்றார்கள்
குழந்தைகளின் உலகத்தில்
பொம்மைகளே குழந்தைகள்
குழந்தைகளிடமிருந்து தவறிய
பொம்மைகளுக்குள்ளும் பேரன்புள்ள
இதயம் இருக்கிறது
கடைகளில் இருக்கும் பொம்மைகள்
குழந்தைகளுக்காக காத்திருக்கின்றன
நீங்கள்தான் பொம்மை வாங்கி கொடுக்கின்றீர்கள்
குழந்தைகள் என்னவோ பொம்மைகளை
குழந்தையாகத்தான் வாங்கிக் கொள்கிறார்கள் .
09.08.2020
- நேதா-
No comments:
Post a Comment