INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

KADANGANERIYAN THAMIZHNAADU[2 POEMS]

 TWO POEMS BY

KADANGANERIYAN THAMIZHNAADU


Translated into Tamil by Latha Ramakrishnan(*First Draft)


Ways blocked everywhere but
there is the lap of Sea the Holy Mother always
to find solace.
Having the ears that can feel the Supreme Quiet
lying in the midst of the noise
of the ever babbling waves’ voice
is boon classic.
While lifting the dumped wastes
and casting them away in one swing
the waves would lilt and dance
in the magnetic pull of the New Moon Day
I enter the Sea searching for fishes.
Oh, come metamorphosing into one such.

கடங்கநேரியான் தமிழ்நாடு

வாழ்வின் அத்தனை திசைகளும் அடைக்கப்பட்டிருப்பினும்
எப்போதும் தஞ்சம் புக கடல் மாதாவின் மடியிருக்கிறது .
கடலலைகளின் ஓயாத பேச்சுச் சத்தத்திடையே இருக்கும்
பேரமைதியை உணரும் காதுகளைப் பெற்றிருப்பது
பெரு வரம் .
தன்மீது கொட்டப்பட்ட குப்பைகளைத் தூக்கி
தூர எறிந்து ஒதுக்கும்.


(2)
They are blessed by Life to probe into their childhood and write it.
Going to school for a mouthful of food
…………………………
Wading through all those we have arrived here, haven’t we?
The human acumen that casts aside the fish
that elude the baits and nets
as rotten
would always keep itself alive and kicking.
The river would hug and kiss them
and allow them to swim along its flow.
Each one in its own course
Nature offers shelter to all.
Your yardsticks and mine
are not one and the same
Yet, the scale is but one.
When each one’s need and cause and fairness
differ
We surrender ourselves at the feet of
cup filled with liquour
providing succour
by making us lose
the ‘I’ in us.
The colour of blood brimming in the cup
would never change.
It is the eyes that perceive
see things in different angles.
Until then this globe would go
round and round.

கடங்கநேரியான் தமிழ்நாடு

பால்யத்தை கிளறிப் பார்த்தெழுத
அவர்களுக்கு வாழ்வு ஆசீர்வதித்திருக்கிறது
ஒருவாய் சோற்றுக்கு பள்ளிக்கூடம் செல்லவும்
சேக்காளிகளின் கிழிந்த ஆடைகளில் தொவைக்காட்சி மை பார்க்க நிர்பந்திக்கப்பட்ட வாழ்வல்லவா நமது
அத்தனையையும் கடந்துதானே இங்கு வந்தோம்
தூண்டில் களுக்கும் வலை களுக்கும்
அகப்படாத மீன்களை
கள்ளப்பட்டவை என விலக்கும் மனித சூக்குமம்
தன்னை உயிர்ப்போடு இயங்க வைக்கும்
அவற்றை உச்சி முகர்ந்து தன்னோடு நீந்த விடும் நதி
அததது அதனனின் போக்கில்
யாவருக்கும் இடமளிக்கும் இயற்கை
உன்னுடைய அளவீடும்
என்னுடைய அளவீடும் ஒன்றல்ல
ஆனாலும் அளவுகோல் ஒன்று தான்
அவரவருக்கான தேவையும் நியாயமும் அறமும்
மாறுபடும் போது
நாம் சுயநினைவை மறக்கச் செய்யும் மதுக் கோப்பையிடம் தஞ்சமடைகிறோம்
கோப்பையில் நிரம்பியிருக்கும் குருதியின் நிறம்
மாறாதது
மாறாக பார்க்கும் கண்களுடைய கோணம்
வெவ்வாறானது
அதுவரை இப் பூமிப் பந்து சுழலும்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE