INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

PAALAIVANA LANTHER

 A POEM BY

PAALAIVANA LANTHER

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


ASH-COLOURED WOLF

That was a lovely mountain-base.
Luscious greenery getting soaked and
flourishing in the small cataract
streaming down the mountain
A few herds of cattle grazing those
and the music of the shepherd
merging into one – so a season that was.
For fleshy supple lambs the taste and price
growing in demand day in and day out
is by reason of the quality of the land’s water
so a view floats n the air
close to your ears.
Contain the swelling goats
with fencing
constructing house in the middle of the fence
keeping his wife inside the house
the new Master buried an embryo in his woman’s womb.

The goats and the wife were forever pregnant
busy begetting children.
Hundreds of lambs
and more than ten wives
were closely being scrutinized by the eyes of
the ash-coloured wolf
from atop the mount.
At an opportune moment
descending all too swiftly
It tore off several sheep
in a deadly sweep.
Going on a plundering spree
the next day and the day after
it left behind, the sense of horror.
Feeling bitter at the colossal loss
and wringing his hands
fearing the other animals up there
he hatched a plan.
IT’S HUNGER, ITS OWN
MY HUNGER, MINE _
So he enforced a new law.
Accordingly the same master
growing faster
got accustomed to this practice:
Each day, midnight
upon hearing the hungry howl of the howl
before it could descend
going there with a lamb standing on the left corner of the herd
tying it in the sturdy tree at the mountain-base and return.
Initially the hapless moans and shrieks of the goats unsettled him as
the pain unbearable of betrayal
Hence he drank a bottle full of liquor
and dragged along the goat.
Betrayal became
his own fair means.
It is thus that Man formulates and fabricates
one and all in him.
Yes
ITS HUNGER, ITS OWN
MY HUNGER, MINE.
These days the wolf too
not trespassing
eat the goat tied there and
go back climbing on the mountain.
In life once again
Business soared.
Just as the master’s pot-belly
his farm too bloated.
That night also
fully drunk he got hold of a fat and supple goat
standing at the left corner
and dragging it along hurriedly
tied it in the usual tree.
Oh what an intoxication that is,
Can you imagine!
Till the time it dawned
and his wife beating her chest and wailing
coming to him
saying that their daughter, a dumb child
was missing
beseeching him to go find her
the state of euphoria remained.
Its hunger its own
Since that day
the wolf’s howl sounds in a different way.


சாம்பல் நிற ஓநாய்
அது ஓர் அழகிய மலையடிவாரம்
மலையில் வழியும் சிறிய அருவியில்
நனைந்து செழித்த பசுமைப் பச்சைகள்
அவற்றை மேயும் சொற்ப மந்தைகளும்
அதனை மேய்க்கும் ஒருவனின் இசையும்
ஒருங்கே இணைந்த பருவ காலமது
கொழுத்த ஆடுகளுக்கென ருசியும் விலையும்
தினந்தோறும் மவுசு ஏறிக்கொள்வதும்
அந்த நிலத்தின் நீர்ச்சுவையென
பேச்சுக்கள் காற்றோடு உரசிப்போகிறது
அதிகரிக்கும் ஆடுகளுக்கு வேலியிட்டு
வேலியின் மத்தியில் வீட்டைக் கட்டி
வீட்டுக்குள் மனையாளை வைத்து
மனையாளுக்குள் கருவைப் புதைத்தான் அந்த புதிய முதலாளி
ஆடுகளும் மனையாளும் எப்போதும்
சூலியாகவும் குட்டிகளையும் பிள்ளைகளையும்
ஈன்றுக்கொண்டே இருந்தனர்
நூற்றுக்கணக்கான ஆடுகளையும்
பத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகளையும்
ஊடுருவிப் பார்த்தன மலையின் மீதிருந்த
சாம்பல் நிற ஓநாயின் கண்கள்
சமயம் பார்த்து இறங்கிய வேகத்தில்
ஏழெட்டு ஆடுகளை குதறிச் சென்றதுவே
மறுநாளும் மறுநாளும் என
சூறையாடத் தொடங்கி
அச்சத்தின் அர்த்தத்தை விட்டுச் சென்றது
கைசேதமென கைகளைப் பிசைந்தவன்
மலை மீதிருந்த மற்ற மிருகங்களின் மீதும் ஐயம் கொண்டு
திட்டமொன்றை தீட்டினான்
அதன் பசி அதற்கு
என் பசி எனக்கென
விதியொன்றை அமைத்தனன்
அதே வளரும் முதலாளி
அதன்படி ஒவ்வொரு நடு இரவும்
ஓநாயின் பசி ஓலத்தைக் கேட்டவுடன்
அது மலையிறங்கும் முன்னமே
மந்தையின் இட மூலையில் நிற்கும் ஆடொன்றை
மலையடிவார தடித்த மரத்தில் கட்டிவைத்து விட்டு
திரும்பிப் பார்க்காமல்
வந்துவிட பழகிக் கொண்டான்
தொடக்கத்தில் ஆடுகளின் ம்மே.. ம்மே.. மே என்னும்
சப்தம் துரோகத்தின் வலியாக இருந்ததால்
முழுச்சாராய போத்தலை குடித்துவிட்டு
இழுத்துச் சென்றான்
துரோகம் அவனுக்கான
நியாயமாக மாறிக்கொண்டது
மனிதன் இவ்வாறாகத்தானே தனக்குள்
ஒவ்வொன்றையும் கட்டமைத்துக் கொள்கிறான்
ஆம்
அதன் பசி அதற்கு
என் பசி எனக்கு
இப்போதெல்லாம் ஓநாய் எல்லை மீறாமல்
கட்டிவைத்திருக்கும்
ஆட்டைத் தின்றுவிட்டு மலையேறி விடுகின்றது
வாழ்வில் மீண்டும் வியாபாரம்
சூடேறத் தொடங்கியாயிற்று
பெருத்த முதலாளியின் வயிற்றைப் போலவே
பண்ணையும் வீங்கியது
அன்றிரவும்
முழு போதையுடன் இடமூலையில் நின்ற
கனத்த வழுவழுப்பான
ஆடொன்றைத் தரதரவென இழுத்துச் சென்று
மரத்தில் கட்டிவைத்து விட்டான்
எப்பேற்பட்ட போதையது தெரியுமா
விடிந்தவுடன்
மனைவி கதறியபடி வாயிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு
வாய்பேசா பிள்ளையைக் காணோமென
தேடித்தருமாறு கேட்கும் வரை தெளியவில்லை
அதன் பசி அதற்கு
ஓநாயின் ஓலம் அன்றிலிருந்து
வித்தியாசமாகக் கேட்கத் தொடங்கியது
*
" ஓநாய் " தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024