INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

KARUNAKARAN SIVARASA

 TWO POEMS BY

KARUNAKARAN SIVARASA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)


I obtained a colour today.
The tinge of yellow recalling Kondarpoo _
the Flower of Golden Shower.
Kalai’s favourite is the pale blue sky
For Prasanna the green of parrot
fluttering in her garden.
For Sukirtha
the lustre of love that she shares
everywhere.
For Dharmi
the gold of the glowing star.
For Preethi
the hue of never-ending long dream.
Jee’s colour is that of
the joyous laughter of violet flowers.
I turned a child
standing in front of a boon
that could be bestowed on none _
God’s Grace and Mercy
forever being topsy-turvy.
இன்றெனக்கு நிறமொன்று கிடைத்தது
கொண்டற் பூக்களை நினைவூட்டும் மஞ்சள்.
கலைக்குப் பிரியமானதோ
வெளிர் நீல வானம்
ப்ரஸன்னாவுக்கு
அவள் தோட்டத்தில் சிறகடிக்கும்
கிளிப் பச்சை
சுகிர்தாவுக்கு
அவள் பகிரும் அன்பின் ஒளிர்வு
தர்மிக்கு
ஒளிரும் நட்சத்திரத் தங்கம்
பிரதீக்கு
தீரா நெடுங்கனவின் நிறம்
ஜீயின் நிறமோ
ஊதா மலர்கள் குலுங்கும்
குதூகலச் சிரிப்பின் வண்ணம்
யாரிடமும் தர முடியாத
வரத்தின் முன்னே
நிற்கும் குழந்தையானேன்
கடவுளின் கிருபை எப்போதும் தாறுமாறானதாகவே இருக்கிறது.

KARUNAKARAN SIVARASA

(2)

Does the din and noise of the road
reduce the sound of the evening prayer
or is it the other way round
asked all too suddenly
God’s Child.
I couldn’t presume anything.
I asked those who came across.
They were in a great hurry
to escape from both bashing
each other.
The child asked the priest.
The Lord’s ears and heart
are so fine-tuned
as that of a swan, my girl
He knows everything, said the priest
and closed his eyes in prayer.
At the instant when the clamour
of the road
and the sound of the prayer
froze to the wail of an ambulance
the priest listening so focused
prayed once again
for the release from the danger
of the siren.
God who is past everything was speeding in the ambulance
with the grievance to be saved.
In the frozen moment
the child saw
the God of the World
and the World of the God.

Karunakaran Sivarasa

மாலைப் பிரார்த்தனையொலியில்
வீதியிரைச்சல் தேய்கிறதா
வீதியிரைச்சலில்
பிரார்த்தனையொலி சிதைகிறதா
என்று திடீரெனக் கேட்டாள்
கடவுளின் குழந்தை
என்னால் எதையும் அனுமானிக்க முடியவில்லை
வழியில் செல்வோரிடம்
கேட்டேன்
இரண்டின் மோதலுக்கிடையிலும்
தப்பிச் செல்லும் அவசரம் அவர்களுக்கு
பிரார்த்தனைக் குருவிடம்
கேட்டாள் குழந்தை
கடவுளின் செவிகளும் இதயமும்
அன்னத்தின்
நுட்பத்திறன் பெற்றவை மகளே
அவரறிவார் ஏதொன்றையும் என்ற குரு
கண்களை மூடித் தியானித்தார்
அவ் வழியில் அம்புலன்ஸின் கதறலுக்கு
வீதியிரைச்சலும் பிரார்த்தனையொலியும்
ஸ்தம்பித்த கணத்தில்
விழிசுருக்கி உற்றாய்ந்த குரு
மீண்டும் பிரார்த்தித்தார்
அந்த ஒலியின் அபாயம் நீங்கட்டுமென
எல்லாவற்றையும் கடந்த கடவுளோ அம்புலன்ஸில்
விரைந்து கொண்டிருந்தார்
காத்தருள வேண்டுமென்ற பராதியோடு.
ஸ்தம்பித்த கணத்தில்
கண்டாள் குழந்தை
உலகின் கடவுளையும்
கடவுளின் உலகையும்




Ragavapriyan Thejeswi, Marimuthu Sivakumar and 6 others
2 Comments
1 Share
Like
Comment
Share

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE