A POEM BY
SRINESAN
If you are one who wants to annihilate me
First abuse me
Obscene words unbearable to the ears
Don’t forget to tarnish my relationship with my mother
Seeing me not reacting
get irritated
and on that account
curse me
That I should be run over by a lorry
Or have the lock of my house
which I would come and open it at midnight
thoroughly electrified.
Or mix poison in the wine I usually drink
If not possible
knowing my passionate love for the mountain crest
take me there and push me into the abyss
If you feel it unnecessary
at least stab my back with a dagger
If you are not that brave
appoint a mercenary.
If you are particular about finishing the business
without a trace
try black magic in any case
If this too doesn’t suit thee
You can drown me
Push me out of a speeding train
You can have me executed on the gallows
Try all these
If none proves effective
rape my wife in front of my eyes
Or when my children are fast asleep
crush their heads with a rocky stone.
If I still survive
please O please
as the last resort
Love me with all your heart.
கொலை விண்ணப்பம்
ஸ்ரீநேசன்
--------------------
நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறவராக இருந்தால்
முதலில் என்னைத் திட்டுங்கள்
மோசமான காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகள்
தவறாமல் அம்மாவுடனான எனது உறவை
அதில் கொச்சைப்படுத்துங்கள்
எதிர்வினையே புரியாத என்னைக் கண்டு
இப்போது எரிச்சலடையுங்கள்
அதன் நிமித்தமாக என்னைச் சபியுங்கள்
நான் லாரியில் மாட்டிக்கொண்டு சாக வேண்டுமென்று
இல்லையெனில் நள்ளிரவில் நான் வந்து திறக்கும்
என் வீட்டுப் பூட்டில் மின்சாரத்தைப் பாய்ச்சி வையுங்கள்
அல்லது நான் பருகும் மதுவில் விஷம் கலந்து கொடுங்கள்
முடியாத பட்சத்தில் மலையுச்சியை நேசிக்கும்
என் சபலமறிந்து
அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விடுங்கள்
அது அநாவசிய வேலை என நினைத்தால்
என் முதுகிலேனும் பிச்சுவாக் கத்தியால் குத்துங்கள்
நீங்கள் தைரியம் கொஞ்சம் குறைவானவரெனில்
ஆள் வைத்துச் செய்யுங்கள்
தடயமே தெரியவரக்கூடாது என்றால்
பில்லி சூன்யமாவது வையுங்கள்
இதுவெதுவும் பொருந்தவில்லையெனில்
ஆற்றில் மூழ்கடிக்கலாம்..
ரயிலிலிருந்து தள்ளி விடலாம்...
தூக்கேற்றிக் கொள்ளலாம்...
இவற்றையெல்லாம் முயற்சித்துப் பாருங்கள்
ஒன்றினாலும் பயனில்லாத பட்சத்தில் கண்ணெதிரே
என் மனைவியை வன்புணர்ச்சி செய்யுங்கள்
அல்லது என் குழந்தைகள் தூங்கும்போது பாறாங்கல்லால்
தலை நசுக்குங்கள்
அப்படியும் நான் உயிரோடு தொடர்ந்திருந்தால்
தயவு செய்து இறுதியிலும் இறுதியாக
அன்பையாவது செலுத்துங்கள்.
No comments:
Post a Comment