INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

PAADHASAARI VISHWANATHAN[TWO POEMS]

  TWO POEMS BY

PAADHASAARI VISHWANATHAN


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


[1]

At home I would arrange everything in order
My better half would leave them all
lying helter-skelter.
At the doorway she will not leave the footwear in pair.
One slipper would lie looking northward;
The nose of the other would lie turning southward
As reason she would say
only then we would have our sharp focus
on the things concerned;
that insects would always crouch
in well-organized rows and
remain unseen if everything is
spic and span.
Am I aligning the fragments of my heart
outwardly!
For me who is a cosmic speck
pests, insects make no difference!
Terribly agitated on seeing a cockroach
upon being asked to thrash it with a broomstick
I would hold it in my palm and
turning it face upward
would kiss it lovingly
and instantly run outside
and leave it there!

Paadhasaari Vishwanathan

வீட்டில் பொருட்களை சீராக அடுக்கி வைப்பேன்.
வீட்டம்மா கோணல் கோணலாக , பப்பரப்பே என
சிதறலாக வைப்பார்.
வாசலில் செருப்பை ஜோடியாக வைக்க மாட்டார்.
ஒரு செருப்பின் மூக்கு வடக்கு பார்த்திருக்கும்..
இன்னொன்றின் மூக்கு தெற்கு பார்த்துக் கிடக்கும் .
காரணமாக அவர் சொல்லுவார் :
அப்போது தான் பார்க்கையில்
பொருள் மீது கூரிய கவனம் படியும் .
பூச்சிபொட்டெல்லாம் சீரான அடுக்கலில் தான்
இடுக்கலாகப் பதுங்கி யிருக்கும்..
ஒழுங்காக நேராக இருந்தால் தெரியாது.
நான் மனதின் சிதறல்களை
புறத்தில் அடுக்கிச் சீராக்குகிறேனோ !
பிரபஞ்சத் தூசி யான எனக்கு பூச்சியாவது
பொட்டாவது !
கரப்பானைக் கண்டு பதறிக் கதறி
அதை 'வெளக்கு மாத்தால் ' அடிக்கச் சொன்னால் ,
நான் கைகளில் ஏந்தி , மல்லாத்தி முத்தமிட்டு
நொடியில் ஒடி வெளியில் எறிவேன் !


[2]
Running fast in a floating walk
Leaving the hall and climbing down the doorway stairs
went away a wonderful spider
of beauty exemplary.
At the wall-nook you have built
a beautiful house.
She who landed in station and reached home
as usual cast it off as cobweb
What to do, my friend
The house is not mine
In my house, why, even in this world
I am but just a wayfarer.
While climbing down and leaving my house
Ho, you could’ve have looked back
and glanced at me one last time.

Paadhasaari Vishwanathan
மிதந்தொரு நடையில் விரைந்தோடி
வீட்டின் ஹால் நீங்கி வாசல் படியிறங்கிப் போனது ஒரு
பேரழகுச் சிலந்தி..
சுவர் முடுக்கில் நீ கட்டியிருந்தாய்
ஒரு அழகிய இல்லம்.
ஊர்திரும்பி வீடேகியவள்
வழக்கம் போல் அதை ஒட்டடை எனத் தட்டி எறிந்தாள்..
என்ன செய்ய நண்பா
வீடு என்னுடையதல்ல..
நானிருக்கும் வீட்டில் , ஏனிந்த உலகிலும் கூட
நானொரு வழிப்போக்கன் தான்..
வீடிறங்கிப் போகையில் ஒருமுறை நீ என்னைத் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றிருக்கலாம் ..

 


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE