INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

K.S.AMBIGAVARSHINI [TWO POEMS]

 TWO POEMS BY

K.S.AMBIGAVARSHINI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


1. THE CALL
The soft stirs of the screen
called me
A very real call
As if someone is present there.
Someone’s hands stretch
as the cool soft breeze
for whom the call is
for me?
Yes, it is a call seeking me.
I want to touch those hands
Should respond to those calls
that pursue me incessantly.
Stopping the curtain-stirs
When I found out the direction wherefrom it blows
Three cats upon the ‘Pungai’ tree.
They would pounce anytime.
Smiling one last time
leaving the whites of the cats to roam around
in the wind
I left
The swaying screen finally
with the wave dashing
pulled out its one hand.

அழைப்பு
ஒரு ஊதாக்காற்றின்
திரையலைவுகள் என்னை அழைத்தன
யாரோ இருப்பதுபோல
ஒரு அழைப்பு
யாரோ ஒருவரின் கைகள் குளிர்தென்றலாக நீளுகின்றன
அழைப்பு
யாருக்காக
எனக்காக?
ஆம் என்னைத் தேடிவருகிற அழைப்பது
அந்தக் கைகளை நான் தொடவேண்டும்
விடாது துரத்துகிற அழைப்புகளுக்கு
பதிலளிக்கவேண்டும்
திரையலைவுகளை நிறுத்திவிட்டு
காற்று வருகிற திசையைக் கண்டால்
புங்கைமீது மூன்று வெள்ளைப் பூனைகள்
அவை எந்த நேரத்திலும் என் மீது பாய்ந்துவிடலாம்
கடைசியாகப் புன்னகைத்துவிட்டு
பூனைகளின் வெள்ளைகளைக்
காற்றில் அலையவிட்டு நீங்கினேன்
திரையலைவு கடைசியாக
அதன் ஒரு கையை
அலைமோதி வெளியிழுத்துக்கொண்டது.


2. THE SPARKS

Initially five
Followed by three
joining fly
and go far away.
The smoke soars high.
From the fire sparks flutter
turning the throat sore
The little girl runs from the tree
into the wilderness and
go round and round
Cranes form a line once again
and float on
On the tree ‘Murungai’ flowers
abound
the fire glows
Why is it sparks rush thus
from the fire
Smoke engulfs
the garbage burnt
apply balm.
K.S. Ambigavarshini

தீப்பொறிகள்

முதலில் ஐந்து
பின்தொடர்ந்து மூன்று
ஒன்றுசேர்ந்து பறக்கின்றன
தொலைவாகிப் போகின்றன
புகை உயரப் பறக்கிறது
நெருப்பிலிருந்து தீப்பொறிகள் கமறுகின்றன
சிறுமி மரத்திலிருந்து பொட்டல்வெளிக்கு ஓடி வட்டமிடுகிறாள்
கொக்குகள் மீண்டும் வரிசைகட்டிப் பறக்கின்றன
மரத்தில் முருங்கைப் பூக்கள்
நிறைய
நெருப்பு எரிகிறது
தீப்பொறிகள் ஏன்
நெருப்பிலிருந்து இப்படிப் பறக்கின்றன
புகைமண்டலம்
சூழ்கிறது
எரிக்கப்பட்ட குப்பைகள்
களிம்பு பூசுகின்றன.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024