TWO POEMS BY
NA. PERIYASAMY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
It knows not how to spell out.
With its sound
it would give some signals
not all can decipher.
Till date not heard the tale of
He who had lost the address
of his dearest
beseeching the wind
From now on
I would become a tale indeed.
.
காற்றுக்கு
எல்லாமும் தெரியும்
பேசத் தெரியாது
தன் ஓசையால்
எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாத
சமிக்ஞைகளைக் காட்டும்.
பிரியத்துக்குரியவளின்
முகவரியை தொலைத்தவன்
காற்றிடம் மன்றாடிய
கதையை இதுவரை
கேட்டதில்லை.
இனி
நான் கதையாவேன்.
(2)
The body rejoices in the pleasant cool.
It was like what we feel
post intercourse
described my pal
his experience of relishing a drink
brimming with ice-chips.
A sense of longing drowned me,
The ice-cubes are ever ready
Blissfully ignorant of it all
So engrossed in her game
was the little girl
who had drawn the ice.
குளிர்க்கட்டியை
நீரில் கலக்க
சில்லிடலில் உடல் மகிழ்ந்தது.
புணர்ச்சிக்குப் பின்னான
குதுகுலத்தை தந்ததாக
கூறினான் நண்பன்
குளிர்கட்டி தளும்பிய
மது அருந்திய அனுபவத்தை.
அவ்வளவு ஏக்கமாகிப் போனதெனக்கு.
எப்பொழுதும்
தயராகவே இருக்கின்றன
குளிர்க்கட்டிகள் .
இது குறித்தெல்லாம்
எவ்வித புரிதலுமற்று
தன் விளையாட்டில் இருந்தாள்
பனிக்கட்டியை வரைந்த சிறுமி.
No comments:
Post a Comment