INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

FATHIMA MINHA (2 POEMS)

TWO POEMS BY

FATHIMA MINHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




(1)

In the cell where the convict is in solitary confinement
his shadow writes a long poem.
Inside the blanket of darkness that has lost the tinge of the Real
Chill chases away the warmth.
All the sounds heard from afar
fill the cell
and lie soaked as notes
in the sheets of isolation.
The electric lights that keep flickering
refuse to drop on the head
in dance delirious of the wind.
With all those sans colours
remain engrossed in colourful dreams
the tiny radiant flame
dissolving within
hums the frozen dark
all too feebly.
Fathima Minha
*
கைதியின் தனித்த அறையில்
நெடுங்கவிதையொன்றை
எழுதுகின்றது நிழல்
நிஜத்தின் சாயம் தொலைந்த இருளின்
போர்வைக்குள்
குளிர் கதகதப்பைத் துரத்துகின்றது
தூரத்தில் கேட்கும் ஒலிகள் யாவும்
அறையை நிறைத்து
ஏகாந்த தாள்களில்
குறிப்புகளாய் ஊறிக்கிடக்கின்றன
அணைந்து அணைந்து
ஒளிரும் மின்விளக்குகள்
காற்றின் தாண்டவத்தில்
தலைமேல் உதிர்ந்து விழ
மறுக்கின்றன
நிறங்களற்ற யாவும்
வண்ணக் கனவுகளில்
ஆழ்ந்திருக்க
ஒளிரும் சிறு சுடர்
தனக்குள் கரைந்து
உறைந்திருக்கும் இருளை
திராணியற்று இசைக்கின்றது


(2)

When it decides to unfasten itself from the cluster
and say goodbye
The wind comes to sit on the branch.
the leaf had appealed for an all too long
journey of ripening with fruits
and changing in shade
fading and withering.
To be floating till that time
in the childhood memories of
sprouting
and turning into a wide boat
it fills up a great grand
dream-tank.
While coming off the tree
And floating along
It places it in a seat.
Yet it resolves not to speak.
and keep feigning as a leaf
buckled.

மரத்தொடுப்பிலிருந்து
விடைபெற்று விடலாம் என
எண்ணும் போது
கிளையில் வந்தமர்கிறது
காற்று
கனிகளுடன் பழுத்து
நிறம் திரிந்து
உலர் சருகாகும் வரை
நெட்டிடைப் பயணமொன்றை
விண்ணப்பித்திருந்தது
இலை
அதுவரை
துளிர்த்திருந்த போதான
பால்யத்தின் நினைவில் மிதந்து
அகன்ற படகாகுவதற்கு
பெரிய கனவுத்தொட்டியை
நிறைக்கின்றது
மரத்திலிருந்து உதிர்ந்து
காற்றில் மிதந்து செல்லும் போதெல்லாம்
ஒரு ஆசனத்தில் இருத்திவிடுகிறது
ஆயினும்
பேசுவதாயில்லை
மடிந்த இலையாகவே- அது
பாசாங்கு செய்துகொள்கிறது.
~மின்ஹா.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024