INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

MANOHARAN SAMBANDAM

 A POEM BY

MANOHARAN SAMBANDAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE MOMENT OF PARTING
Henceforth only those demons sans feet
and angels that fly
that enter into this room in the household
can walk without getting their feet hurt.
For
on the other side of the door shut with a bang
the mirrors reflecting the heart
lie broken, smashed and turned into
smithereens.
In the glass splinters are seen
Sylvia’s countenance
The ex-girl friend of Steve whom he was madly in love with
and also the shadow of innumerable women
all over the pages of history
the wails of Einstein , Tolstoy
resound through the length and breadth of the room
Unaware of this
someone of a short stature
and low income
keeps knocking at the doors
one by one.
The candle being unlit yet
growing shorter
turns the darkness in him
all the more dense.
His fingers ache
Yet
He goes on knocking at the doors
searching for one where a ‘kuthuvilakku’ is glowing
The wooden chair whiling away its time
at the entrance of the shop with a discount placard
with many going away without taking
a liking for it and buying it
keeps musing over the day
when its first shoot sprouted
and the first ever flower bloomed
and so ageing.
Whoever joins hands with one of them
On parting later on
with yet another bout of leave-taking
please pronounce the rejection
without mincing words.
Also, close the door noiselessly
and go away without a backward glance.

பிரியும் நொடி

இனி இவ்வீட்டின் அறைக்குள் ஊடுருவி வரும்
காலில்லாப் பேய்களும் பறக்கும் தேவதைகளும் மட்டுமே
பாதம் புண்படாமல் நடக்க முடியும்
ஏனெனில்
படீரென்று அறைந்து சாத்தப்பட்ட கதவின்
உள்ளே மனம் பார்க்கும் கண்ணாடிகள்
உடைந்து நொறுங்கி சுக்கு நூறாகி
தரை முழுதும் இறைந்து கிடக்கின்றன
சில்லுகளில் தெரிகிறது சில்வியாவின் முகம்
ஸ்டீவ் விரும்பிய முன்னாள் பெண் தோழியின்
மற்றும் உலக வரலாற்றின் வேறு
பல பெண்களின் நிழல் தரை முழுதும் படர்கிறது
ஐன்ஸ்டீன் டால்ஸ்டாய் அலறி அழுவதும்
அவ்வறை எங்கும் எதிரொலிக்கிறது
இது தெரியாமல்
குறைந்த சம்பளம் பெறும் குட்டையான ஒருவன்
ஒவ்வொரு கதவாகத் தட்டிக் கொண்டிருக்கிறான்
எரியாமலேயே உயரம் குறைந்து வரும் மெழுகுவர்த்தி
அவன் மனதில் இருளைப் பெருக்குகிறது
விரல்கள் வலித்தாலும் தட்டிக்கொண்டே இருக்கிறான்
ஒரு குத்து விளக்கு எரியும் அறையைத் தேடி
பலர் அமர்ந்து பார்த்தும் விலை கேட்டும்
பிடிக்காமல் வாங்காமல் போய்விட்டதால்
கடை வாசலில் தள்ளுபடி அட்டையுடன்
காலம் தள்ளும் மர நாற்காலி ஒன்று
தான் முளைத்துத் துளிர் விட்டதையும்
முதல் பூப் பூத்ததையும் நினைத்துக் கொண்டே
முதிர்கிறது
இவ்விருவரில் ஒருவருடன் யார் சேரினும்
பின்னொரு பிரிவில் விலகும்போது
தெளிவாக அறிவித்துவிடுங்கள் நிராகரிப்பை.
மேலும் கதவை மெல்லச் சத்தமின்றி சார்த்தி
திரும்பிப் பார்க்காமல் சென்று விடுங்கள்.
Manoharan Sambandam

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024