INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, August 26, 2021

THAMIZHNATHY

 A POEM BY

THAMIZHNATHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

‘How I wish he had not drunk so much”
With tears of sheer despair
I observed.
‘Lying dead in a lodging
as someone orphaned _’
our friend lamented.
Trying hard to keep in tact
the breaking voice
another read out the poem
so close to his heart.
At his tomb
assuming the spot where his head would be
we place the blossoms.
The wind swirling all too suddenly
takes away one of those.
What a wonderful artiste he had been
What an enterprising enthusiast.
We heave a sigh.
For those who have stagnated on the one line
‘A drunkard he died’
do not know him
They know not his poetry
nor painting
nor his all too tender heart
that would make him bury his face
upon the table
and sob
listening to songs immortal
leading you down the memory lane.
Thamizhnathy Nathy
'அளவா குடிச்சிருக்கக்கூடாதா?' என்றேன் ஆற்றாமையின் கண்ணீருடன்
'இப்படியா அநாதரவாய் ஒரு விடுதியில் செத்துத் தொலைப்பான்!' என்றான் தோழன்
அவனுக்கு மிகப்பிடித்த கவிதையை
உடையும் குரலை இழுத்திழுத்து ஒட்டி ஒட்டி
வாசித்தாள் இன்னொருத்தி
கல்லறையில்
அவனுடைய தலைப்பகுதி இருக்கக்கூடும்
என அனுமானித்த இடத்தில்
மலர்களை வைக்கிறோம்.
திடீரெனச் சுழன்றடித்த காற்று
ஒரு மலரை கையிலேந்திச் செல்கிறது
'எத்தகு கலைஞனாயிருந்தான்
இரசிகனாயிருந்தான்!'
பெருமூச்செறிகிறோம்
குடித்ததனால் செத்தான்
என்றொரு செய்தியில்
தேங்கிவிட்டவர்களுக்கு
அவனைத் தெரியாது
அவன் கவிதையோ ஓவியமோ தெரியாது
காலத்தை மீள அழைக்கும் பாடல்கள் ஒலிக்கும்போது
மேசையில் முகம்புதைத்து விசும்பும்
அவன் மென்மனசும் தெரியாது.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024