A POEM BY
MOHAMED RIYAL
Canvas
In between Quiet
and Conflict
Close to tests and contests
I repose for a while.
In the soft music of
the tender cool breeze
Yesterday and Tomorrow
drop by drop
tasting sweet within.
I do ponder over
the semblance of Death
at times
waiting at the corner of the
bustling street
for my turn.
Mohamed Riyal
ஒளி வீசிப் படரும்
ஓவியப் பரப்பில்
ஆறுதலுக்கும்
அலைசலுக்கும் நடுவில்
சவால்களின் நெருக்கமாக
சற்று அமர்ந்து கொள்கிறேன்.
குளிர் காற்றின்
மெல்லிய இசையில்
நேற்றையும் நாளையும்
ஒவ்வொரு துளியாக
எனக்குள் இனித்துக் கொண்டிருக்கின்றன.
சிற்சில சமயங்களில்
தெரு சந்தடியில்
என் முறை வரும்வரை காத்திருக்கும்
மரணத்தின் சாயலையும்
அவதானித்துக்கொள்கிறேன்.
(முகம்மது றியால்).
No comments:
Post a Comment