TWO POEMS BY
NISHA MANSOOR
If sleep is forgetting the I for the time being
Is sleeplessness the dance chaos of the I mused Musafir.
‘My son, you eyes are shrouded in darkness
as the haphazard scribbling of
Suruma
You are suffering from sleeplessness.
For, it is sleep that turns a man radiant.
In sleep he is all alone
Being one with his savior
In sleep he is blissfully unaware of Self
Immersed in Oneness.
Sleep, My Son
Rejuvenate yourself
Have yourself open up into a flower
Show yourself to your own self
Sleep, My Son, said Sufi.
தகிக்கும் சிவந்த விழிகளுடன்
"உறக்கம் தற்காலிக சுயமறத்தல் எனில்
உறக்கமின்மை என்பது சுயத்தின் ஆழிக்கூத்தா ?"
என்றான் முஸாஃபிர்
"தாறுமாறாக இடப்பட்ட
சுருமாவின் கிருக்கல்களாக
உனது கண்கள் கருமை சூழ்ந்திருக்கின்றன மகனே
நீ உறக்கமின்மையால்
தவிக்கிறாய்
உறக்கமே மனிதனைப்
பொலிவடையச் செய்கிறது
உறக்கத்தில் அவன்
தன் ரட்சகனை அன்றி
வேறொன்றல்லாத நிலையில்
தனித்திருக்கிறான்
உறக்கத்தில் அவன்
தான் எனும் சுயத்தையும் மறந்தபடி
ஏகத்தில் ஒடுங்கி நிற்கிறான்
மகனே உறங்கு
உன்னைப் புதுப்பித்துக் கொள்
உன்னை மலர வைத்துக் கொள்
உன்னை உனக்குக் காண்பித்துக் கொடு
மகனே உறங்கு" என்றார் சூஃபி
(2)
In the grip of intense sufferings
With feelings and emotions
Never taken into consideration
And with wishes simple and minimal
Never realized
O. the parrot of broken wings….
With the tears of your sufferings
I construct the sky
With the dense volume
of my Love Supreme
Create a wing brand new.
புறக்கணிக்கப்பட்ட மனோவுணர்வுகளுடனும்
நிறைவேறாத எளிய ஆசைகளுடனும்
பரிதவித்துக் கொண்டிருக்கும்
சிறகொடிக்கப்பட்ட கிளியே,
உன் துயரத்தின் கண்ணீரைக் கொண்டொரு
வானத்தைச் சமைக்கிறேன்
என் பேரன்பின் அடர்த்தியைக் கொண்டொரு
புதியசிறகை உற்பத்தியாக்கு.
No comments:
Post a Comment