TWO POEMS BY
MA.KALIDAS
plucks it softly
Some female
strings it with her gentle hands
Some female
collects the leaves withered
of heat unbearable
Some female keeps it aside
for biodegradable trash
Thus this day stockpiled as manure
unfolds the petals of another day .
In order to collect the honey meant for it
before some female comes to collect
there hums the Golden Bee
that with the passage of Time
‘ceased to be’
யாரோ ஒருத்தி
அலுங்காமல் குலுங்காமல் பறிக்கிறாள்.
யாரோ ஒருத்தி
தன் மென்கரங்களால் தொடுக்கிறாள்.
யாரோ ஒருத்தி
பேரம் பேசாமல் சூடுகிறாள்.
யாரோ ஒருத்தி
வெப்பத்தால் கருகிய சருகுகளை
வாரி அள்ளுகிறாள்.
யாரோ ஒருத்தி
மட்கும் குப்பைக்கு ஒதுக்குகிறாள்.
இப்படியாக, உரமாகத் தேங்கிய இந்நாள் இன்னொரு நாளை மலர்த்தெடுக்கிறது.
யாரோ ஒருத்தி வரும் முன்
தனக்கான தேனெடுக்க ரீங்கரிக்கிறது
காலத்தால் காணாமல் போன பொன்வண்டு.
- மா.காளிதாஸ்
(2)
Like the mentally deranged woman
coming out of the Subway
crowded with posters
within and without
Coming all too casually from the dark _
This Day.
In the photograph taken
standing beside
after offering a morsel of food
for one meal
Your smile is not
all that natural.
.
உள்ளும் புறமும் சுவரொட்டி அப்பிய
சுரங்கப்பாதையிலிருந்து வெளிவரும்
மனநிலை பிறழ்ந்தவளைப் போல
இருளிலிருந்து
எந்த விகற்பமுன்றி வெளிவருகிறது
இந்நாள்.
ஒருவேளைக்கான
உணவுத்துணுக்கைக் கையளித்து
அருகில் நின்று
எடுத்த புகைப்படத்தில்
அவ்வளவு இயல்பாக இல்லை
உன் புன்னகை.
- மா.காளிதாஸ்
No comments:
Post a Comment