INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

THAMARAI BHARATHI

 A POEM BY

THAMARAI BHARATHI

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



THE TEETH OF BEAST BEING HUNTED

We are being hunted non-stop
being deceived non-stop
We are being hunted
for the sins committed
as well as for those to be committed
We have no expertise to guess the strategies
Know not how to escape them.
Cruel words delivered
in the grip of events unfolding
tear us into shreds as the teeth of hyena
In response there sprout the teeth of wolf
in us.
As animal trapped in cage
We writhe and rage.
In life we are an error in Time
occurring in between an instant
when the good and bad not known
being ignorant of the right and wrong
And with our teeth buried deep
we keep waiting with the hope
that a time would come
for the arrival of messiahs
to redeem us.

துரத்தப்படும் விலங்கின் பற்கள்
————————————————
துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்
செய்த பாவங்களுக்கும்
செய்யப் போகும் பாவங்களுக்குமாக
சேர்த்தே விரட்டியடிக்கப் படுகிறோம்
வியூகங்களை யூகிக்கும் வல்லமையை அறியோம்
வியூகங்களில் இருந்து தப்பவும்
வழியறியோம்
நிகழ்வுகளின் பிடியில்
பிரசவமாகும் குரூர சொற்கள்
கழுதைப் புலியின் பற்களாக குதறுகின்றன
பதிலுக்கு நமக்குள்
ஓநாய்களின் பற்கள் முளைத்து விடுகின்றன.
பொறியில் சிக்கிய விலங்காய்
துடிக்கிறோம்
நெறிபிறழ் நடத்தையில்
சரியென்றும் தவறென்றும்
சம பாகத்தில்
நன்றென்றும் தீதென்றும்
பிரித்தறியா தருணத்தில்
இடைவந்து போன
காலப்பிழை நாம்
மீட்பர்கள் வந்துதவும்
காலமொன்று வருமென
காத்திருக்கிறோம்
பற்கள் ஒடுங்க ஒடுங்க.
தாமரைபாரதி

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE