A POEM BY
ILAMPIRAI
collecting and gathering
and pours out
turning everything pleasantly cool
Love and compassion should spring
on their own will
straight from the depths of heart
But kindhearted humans
have in fact become clusters of hard stones
never caring for those pleading for a comforting word
Not at all yielding
For those hearts that have drained their souls
of all blood
and turned into deadly deserts
torrential rain is truly hope-filled.
All that are precious
are being wasted away.
Just as love precious
all channels available for humans who want to convey and share their love
and wishful thinking
are being destroyed.
As people of the soil
escaping from the war-ridden land
the void within weighing heavy
are going away
laden with sorrow
Truth and Love
from every heart.
Shouldering the burden of Human tragedy
of standing alone in a huge crowd
all abandoned
caught in a turmoil
keeps spinning
as empty globe
into day and night
_ the Life’s Orb.
Ilampirai
உயரத்திலிருந்து
கூடித்திரண்டு
குளிரப் பெய்யும்
மழையாக
உள்ளத்திலிருந்து
தானே வர வேண்டும்
பரிவும் அன்பும்.
ஆறுதலான சொற்களுக்காக
மன்றாடி நிற்பவர்களுக்கும்
மனமிரங்காத
கல் கூட்டங்களாயினர்
கருணை மனிதர்கள்.
ஆன்மாவின்
குருதியை
இறைத்து இறைத்து
அனல் பறக்கும்
பாலையான மனங்களுக்கு
நம்பிக்கையன்றோ
பெருமழை.!
அரிதான எல்லாம்
வீணடிக்கப்படுகின்றன
பேரன்பின் நினைவுகளைப் போலவே
மனிதர்கள்
சக மனிதர்களிடம்
பிரியமுடன்
சொல்லிக்கொள்ளும்
விருப்பங்களுக்கான எல்லா
முகாந்திரங்களும்
அழிந்துகொண்டிருக்கின்றன.
போர் மண்ணிலிருந்து
வெறுமையுடன்
தப்பிச் செல்லும் சொந்த நாட்டு
மக்களாக
துயரங்களுடன்
வெளியேறிக்கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு மனதிலிருந்தும்
உண்மையும் நேசமும்.
பெருங்கூட்டத்திற்கிடையே
நிராதரவாய் நின்று தவிக்கும்
மானுட பரிதாபத்தைச் சுமந்து
வெற்றுலகாய் சுழன்றுகொண்டிருக்கிறது
பகலிரவென உயிர்க்கோளம்.
இளம்பிறை.
No comments:
Post a Comment