INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

MA.KALIDAS

 A POEM BY

MA.KALIDAS



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The little girl doing somersaults non-stop
unmindful of the loosening of her shirt
has learnt to ignore the borderline of Love
that keeps approaching
all the time
getting erased.
With no stickiness of sweat
From her hand-sand
Vowels drop erroneously.
Turning the left thumb
into the tip of compass
Lifting the right leg up to her hip
bowing
when she draws
the circle
She never minds those
who metamorphose into
sunflowers.
to a fellow-girl
who extends her half-relished lollipop
towards her
she gives a chalk-piece
and asks her to change the date
in her old classroom.
While gulping a mouthful of water
He who struggles so hard
changes the song
thereby making the bell ringing
after interval
for the next class
go unheard.

சட்டையின் தளர்வு குறித்த
கவலையின்றி
தொடர் கரணம் அடிக்கும் சிறுமி
அழிந்து கொண்டே நெருங்கி வரும்
அன்பின் எல்லைக்கோட்டை உதாசீனப்படுத்தப் பழகிக் கொண்டாள்.
வியர்வையின் பிசுபிசுப்பின்றி
அவள் கைமணலிலிருந்து
பிழையாகவே உதிர்கின்றன உயிரெழுத்துகள்.
இடது பெருவிரலை
காம்பஸின் முனையாக்கி
வலது காலை இடுப்பு வரை தூக்கி வணங்கியபடி
வட்டம் வரையும் போது
சூரியகாந்தியாக மாறுபவர்களை
ஒருபோதும் பொருள்படுத்துவதில்லை.
எதைப் பற்றியும் யோசிக்காமல்
தன் கையிலிருக்கும்
எச்சில் லாலிபாப்பை நீட்டும்
சக சிறுமியிடம்
சாக்பீஸ் துண்டொன்றைக் கொடுத்து
தன் பழைய வகுப்பறையில்
தேதியை மாற்றச் சொல்கிறாள்.
ஒரு மடக்கு தண்ணீர் அருந்தும்போது
இடைவேளை முடிந்து
அடுத்த வகுப்புக்கான மணியடிப்பது
கேட்காதபடி, பாட்டை மாற்றுகிறான்
பெரும்பாடு படுபவன்.
- மா.காளிதாஸ்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024