A POEM BY
YAVANIKA SRIRAM
Yavanika Sriram :Anaamikaa Rishi கவிதைக்கும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பிற்கும் அம்மொழி பெயர்ப்பை மீண்டும் தமிழில் கன்வர்ட் செய்யும்போது உண்டாகும் விசித்திரதன்மைக் கும் இடையே (அது வேறு என்னவோ செய்கிறது) மூன்று காலங்கள் உண்டாகிவிடுவது போல் இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று அறிய ஆவல்.
Anaamikaa Rishi : மூல கவிதைக்கு மிக நெருக்கமான மொழி பெயர்ப்புக்கு மிக முக்கியத் தேவை ஒரு தெளிவான வாசகப் பிரதி கிடைத்தல். ஒரு வாசகராக உங்கள் கவிதையில் அது எனக்குக் கிடைத்ததாகச் சொல்லவியலாது. என் போதாமையே இதற்குக் காரணம்.
அதற்காக முற்றும் புரியக் கூடிய நேரிடையான கவிதை களைத்தான் மொழி பெயர்ப்பது என்ற நிலைப்பாடு சரியல்ல. சில வார்த்தைகளின் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கவிதையில் பொருந்தி வருவதாகத் தோன்றும் போது மொழிபெயர்ப்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. (உதார ணம்: பீடிகை)
நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள், எதைப் பற்றி எழுதினீர்கள், இந்த வார்த்தையை எந்த அர்த்தத் தில் பயன்படுத்தினீர்கள் என்றெல் லாம் கவிஞரிடம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு மொழி பெயர்த்தால் மொழி பெயர்ப்பு இன்னும் நேர்த்தியாக அமையக் கூடும். ஆனால்,அது கவிஞரிடம் நிகழ்த்தப்படும் அத்துமீறலாகி விடக்கூடுமோ என்ற தயக்கமும், ஒரு கவிதைக்கு எழுத்தாளர் பிரதி ஒன்றும் (ஒன்று தான் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா) ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளும் உண்டுஎன்ற நவீன தமிழ்க்கவிதைப் போக்கில் பெற்ற பார்வையின் காரணமாக கவிஞரிடம் அர்த்தத்தைக் கேட்பதில் உள்ள ஒவ்வாமையுணர்வும் சேர்ந்து எனக்குக் கிடைக்கும் அர்த்தத்தில் மொழிபெயர்க்கிறேன்.
பல சமயங்களில் பூடகக் கவிதை பகுதியளவே அர்த்த மாகி ஆனாலும் அதில் உணரக்கிடைக்கும் ஒரு ஆழம் அதை மொழிபெயர்க்கத் தூண்டு கிறது. மேலும் மூலமொழிக்கும் இலக்குமொழிக்கும் உள்ள தனித்து வமான வாக்கிய அமைப்புகளும் விரிபொருள்களும்கூட மூல கவிதை யின் மொழிபெயர்ப்பில் நெருட லாக அமையலாம்.
நீங்கள் விரும்பினால் உங்களுடைய இந்தக் கவிதையில் நீங்கள் சொல் லியிருப்பதை சொல்ல முற்படுவதை குறிப்புணர்த்தலாக கமெண்ட் பகுதியிலோ உள்பெட்டியிலோ தெரிவிக்கலாம். அதன் மூலம் என் மொழி பெயர்ப்பின் முதல் வரைவில் செய்யும் திருத்தங்களையும் இங்கே வெளியிடலாம்.
எப்படியுமே, மூலமொழிப் பிரதியை இலக்குமொழியில் பெயர்த்த பின் அதை மீண்டும் மூலமொழியில் செய்தால் அது ஒருவித விசித்திரத் தன்மையோடுதான் இருக்கும். இது உரைநடைக்கும் பொருந்தும்! ஆனா லும், இந்த வாதத்தை சரியில்லாத மொழிபெயர்ப் புக்கு சாதகமாக்கி விடலாகாது!
லதா ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment