INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

DILOGINY MOSES

 A POEM BY

DILOGINY MOSES

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

In the courtyard where the sparrows played
at the instant when the squirrels’ hop
ceased to be
Elder brother who was taken away before receiving the rice-balls so lovingly rounded by her
Alas, how could he have disappeared without a trace!!!
Feeling shy and face glowing
She joy-personified saying that her marriage was on the day after
They took away ‘Sevviakkaa’ just for interrogation
But then…
Riddles remain unraveled
But for the fact that
along with her torn blouse
besides the dead body
in the temple well
bloated and swollen
with the post-mortem report confirming
sexual assault…..
The lifelines of younger uncle
embedded in the chariot-rope
being drawn there
have not yet disappeared.
As if with the hope of returning
holding me close one last time
and planting a tender kiss
saying ‘I will be back tomorrow
bidding farewell and leaving….
Oh, my dear father _
How come he had turned into
a query unanswerable …..
Well, leave those apprehended by thee
at least those whom we had handed over
what has befallen them
can anyone say?
no way….?
For one and all – the same name
Missing Persons.
These are tales of
the Land of Enforced Disappearances.
Diloginy Moses

• புலுனிகள் விளையாடிய
முற்றத்தில்
அணில்களின் துள்ளல்
அடங்கிப்போனதொரு நொடியில்
அம்மா
உருட்டிய கவளங்களை
வாங்கும் முன்பே
கொண்டு போகப்பட்ட அண்ணன்
எப்படி
காணாமல் போயிருப்பான்!!!!!
நாளைக்கு தான் கலியாணமென்று
முகமெல்லாம் சிவந்து
வாயெல்லாம் பல்லாய் நின்ற
செல்வியக்காவை
விசாரணைக்கு தானே
அழைத்து போனார்கள்
விடுகதைகள் விடுபடவேயில்லை
அவளது கிழிந்த
சட்டையோடு
கோயில் கிணற்றில்
ஊதிப் பெருத்திருந்த
வன்புணரப்பட்டதாய்
மருத்துவ அறிக்கையொன்று சொன்ன
சடலத்தை தவிர
அதோ இழுக்கப்படுகிற
தேரின் வடத்தில்
பதிந்து கிடக்கும்
சின்ன மாமாவின் ரேகைகள்
இன்னும் அழியவில்லை
திரும்பி வருவாரென்ற
நம்பிக்கையில் போலும்
கடைசியாக
ஓமந்தையில் வைத்து
இறுக்கியணைத்தொரு
முத்தம் தந்து
நாளை வருவேனென்று
விடை பெற்ற அப்பா
வினாவானதெப்படி!!!!!!
நீங்கள் பிடித்தவர்களை
விட்டு விடலாம்
நாங்கள் கொடுத்தவர்களாவது
என்னவானார்களென்று
ஏதேனும் தெரிகிறதா
எல்லோருக்கும் ஒரே பெயர் தான்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
இது காணாமலாக்கப்பட்ட
தேசத்தவரின் கதைகள்...
30.08.2021

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024