TWO POEMS BY
KARUNAKARAN SIVARASA
Him
Her
They
The Young and the Old _
They can’t be in any secret detention centres….
Faced with the craftiness of
converting the secret detection camps
evacuated
into reception halls
and feasting venues
we are sitting here
with sobbing heart
and sprouting tears
and with words
that are dying to explode
Hard luck of the worst order
coming in myriad shapes and forms
have abducted more and more.
Those who surrendered
_it whisked away
none knows where.
Then it feigned innocence
as if it knows not a thing.
Well, we know what would have happened
You and they too would be knowing it
all too well.
Knowing everything
Bearing witness to everything
All are here
except those
who are no more.
Karunakaran Sivarasa
இனித் தேட முடியாது
அவனை
அவளை
அவரை
அவர்களை...
எந்த மறைப்பிடத்திலும்
அவர்கள் இருப்பதற்கில்லை.
காலியாக்கப்பட்ட மறைப்பிடங்களை
விருந்துக் கூடங்களாகவும்
வரவேற்பு மண்டபங்களாகவும்
மாற்றப்பட்ட தந்திரத்தின் முன்னே
விம்மும் இதயத்தோடும்
துளிர்க்கும் கண்ணீரோடும்
வெளிப்படத் துடிக்கும் சொற்களோடும்
அமர்ந்திருக்கிறோம்
ஒரு கெட்ட காலம்
வெவ்வேறு ரூபங்களில் வந்து
ஒவ்வொருவரையும் பிடித்துச் சென்றது
சரணடைந்தவர்களை
தந்திரமாக அள்ளிச் சென்றது
பிறகு
எதுவுமே தானறியவில்லையென
கையை விரித்தது.
எங்களுக்குத் தெரியும்
என்ன நடந்திருக்கும் என்று
உங்களுக்கும் அவர்களுக்கும் கூடத் தெரியும்
என்ன நடந்தது என்று.
எல்லாவற்றையும் அறிந்து கொண்டு
எல்லாவற்றுக்கும் சாட்சியாக
எல்லோரும் இருக்கிறோம்
இல்லாமற் போனோரைத் தவிர.
The child playing with the puppy
and the puppy playing with the child
shared god’s gift equally
in their childhood.
How come then God’s gift
strangely changes
in Summer Monsoon Times
the puppy could never decipher.
With the frontiers changing
a dividing line came to be.
A world beyond that line
and one this side _
between the two worlds
emerged thus
Both of them being
here and there
so the seasonal game going on..
it watching lying down.
God’s bias
remains beyond its grasp.
பிரிகோடு
- கருணாகரன்
நாய்க்குட்டியுடன் விளையாடும் குழந்தையும்
குழந்தையுடன் விளையாடும் நாய்க்குட்டியும்
தங்கள் குழந்தைப் பருவத்தில்
கடவுளின் பரிசை சமமாக பகிர்ந்து கொண்டனர்.
பிறகெப்படி முதுவேனிற் காலத்தில்
கடவுளின் பரிசு
வினோதமாக மாறுகிறதென
நாய்க்குட்டிக்கு விளங்கவேயில்லை
எல்லைகள் வேறாகி
நடுவே ஒரு பிரிகோடு
நூதனமாக இருந்து கொள்ள
அந்தக் கோட்டுக்கு
அப்பால் ஒரு உலகம்
இப்பால் ஒரு உலகம்
என எழுந்த இரண்டு உலகங்களுக்கிடையில்
அப்பாலும் இப்பாலுமாக
இருவரும் இருக்கும்
பருவத்தின் விளையாட்டை
படுத்திருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறது அது
கடவுளின்
வஞ்சனையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை அதனால்
No comments:
Post a Comment