INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

SU.SIVARAMAN (2 POEMS)

 TWO POEMS BY

SU.SIVARAMAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)

THE SINISTER SEA BEYOND SWIMMING
Dreams of the island where the war is on
keep falling, emitting fire.
Heads fleeing for life are ripped apart
Sending its waves incessantly the Sea observes it all haplessly
Waves turn red, blood-filled
The little girl stands on the shore and looks on
There brims tears
defying our swimming across…
When the war weeping screaming wailing hysterically
begins speaking in the language of weapons
the voices on the other side
would grow silent
falling dead one by one.
The gruesome expanse of sand
The closing communiqué
that the sky with the glittering stars of hope
has crashed down
Those who tried escaping in the float
were not betrayed by the watchtower light, my friend
After all we are to die
with the float toppling mid-sea _
The Sea has seen so much, too many, you see…..
Do you know _
How so many a naked female body it has devoured
and digested
in absolute sympathy and empathy – Oh, no…..
Mother’s boat escaped in the East
Daughter’s in the North
Both their bodies reached the
Western shore.
He who dwells on the shore
where the landless try to flee
has evolved into a cannibal.
Surrounded by the Sea
our children
trying in vain to swim and reach the shore of future
come floating and land ashore.
For burying them in the soft sand spread wide
We thank
on behalf of the shore on other side.

சூ. சிவராமன்

நீந்திக் கடக்க இயலாத கடல்
போர் நிகழும் தீவைப்பற்றிய கனவுகள் நெருப்பைக் கக்கியபடி விழுந்துகொண்டிருக்கின்றன
உயிருக்கு பயந்து ஓடும் தலைகள் வெடித்துச் சிதறுகின்றன
அலைகளை அனுப்பி அனுப்பிப் பார்க்கிறது கடல்
குருதி கலந்து சிவக்கிறது அலைவாய்
சிறுமி கரையில் நின்று பார்க்கிறாள்
தளும்பி நிற்கிறது
கடக்க முடியாத கண்ணீர்
கத்திக் கதறி அலறி ஓலமிடுகிற போர்
ஆயுதங்களால் உரத்துப் பேசும்போது
எதிர்க்குரல்கள் இறந்து விழும்
நெடிய கொடும் மணல்வெளி
கடைசித் தகவல்
நம்பிக்கை நட்சத்திரங்கள் மின்னும் வானும்
இடிந்து விழுந்ததாக
கள்ளத்தோணியில் தப்பிக்க முனைந்தவர்களை
கலங்கரை விளக்குகள் காட்டிக்கொடுக்கவில்லை தோழனே
எப்படியும் நடுக்கடலில் தோணி கவிழ்ந்து சாகப்போகிறவர்கள் தானே நாம்
கடல் எவ்வளவோ உடல்களை பார்த்துவிட்டது
பரிதாபப்பட்டு எத்தனை அம்மணப் பெண்தேகங்களை தின்று செரித்திருக்கிறது தெரியுமா
அம்மாவின் படகு கிழக்கில் தப்பித்தது
மகளின் படகு வடக்கில் தப்பிப் பிழைத்தது
இருவர் உடலும் மேற்கில் ஒதுங்கியது
நிலமிழந்தவர்கள்
தப்பிச்செல்ல முனையும் கரையில் வசிப்பவன்
நரமாமிசம் புசிக்கிறான்
சுற்றி வளைத்திருக்கும் கடலில்
எங்கள் குழந்தைகள்
எதிர்காலத்திற்குள் நீந்திக் கரைசேர முயன்றுத் தோற்று
ஒதுங்குகையில்
மென்மணலில் புதைத்ததற்கு
எதிர்க்கரைச் சார்பாக நன்றி.
~சூ.சிவராமன்


(2)
Beneath the sandy stretches
were the prison cells.
There nights cumulative
with access denied to day
Deadly Quiet Darkness Heat Unbearable
At the instant
when the sea’s lilting sound commenced
above our head
we began conversing with the waves.
With two salty eyes leaking
swallowing salt gulping salt
We lived and died.
We are droplets
of the vast expanse of salt.

சூ. சிவராமன்

மணல்வெளிகளின் கீழே
சிறைக் கொட்டடிகள் இருந்தன
அங்கு பகலே நுழையாத இரவுகளின் மொத்தம்
அமைதி இருள் தாளாத வெப்பம்
தலைக்கு மேல்
கடலின் துள்ளலோசை கேட்கத் துவங்கிய கணத்தில்
அலைகளோடு பேசத் தொடங்கினோம்
ஒழுகும் இரு உப்பு விழிகளோடு
உப்பை உண்டு உப்பைப் பருகி
வாழ்ந்து மடிந்தோம்
விரிந்து படர்ந்த
உப்பின் துளிகள் நாங்கள்.

























No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024