INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, October 6, 2021

RAGAVAPRIYAN THEJESWI

 A POEM BY

RAGAVAPRIYAN THEJESWI


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




As the pillar in a shrine of Lord Aranga
with the smudge of the oil residual
upon your fingers
I remain here and now.
The gravel stones of soulful moments
lived and waded through
A blade of grass of Time
of the corridors of Lord Aranga’s temple
with the spread of gravel stones
sprouts defying the stamping feet.
While circumambulating
the rainbow of the murmurs of my hymns
for Lord Aranga
appears as the halo….
The swing of devotion
of the laden heart that prostrates
and prays
rise and
remains there
not lowering.
Standing in front
with palms together paying homage
at this time when the Garuda Eons
as eyelids within me
blinking
and quivering
a lamp of joy is raised above
and taken in a circular motion
for Lord Aranga, the benign.
Oh do worship him
patting your cheeks devoutly…
Then
in the palm of you and me
extending
a droplet of moisture
would fill and swell…..
Oh do cherish it in your heart
before it starts drying up
Henceforth let devotion
fill your heart
as pillars plenteous…
sans oil stains.
Ragavapriyan Thejeswi

அரங்கனின் கோவில் ஒன்றில்
உங்கள் விரல்களின்
மீந்த எண்ணெய்
அப்பிக்கிடக்கும்
தூணாகக் கிடக்கிறேன் இன்று...
வாழ்ந்து கடந்த
ஆன்ம நொடிகளின்
கற்கள்
பாவிக் கிடக்கும்
அரங்கக் கோவிலின்
பிரகாரத்தின்
காலப் புல் ஒன்று
பாதமிதிகளை மீறி
துளிர்க்கிறது...
சுற்றி வருகையில்
அரங்கனுக்கான
என் பிரபந்தகளின்
முணுமுணுப்பின்
வானவில்
மேற் வட்டமென
தோற்றமளிக்கிறது...
விழுந்து வணங்கும்
கனத்த இதயத்தின்
பக்தி ஊஞ்சல்
உயர்ந்து
தாழ மறுத்து
கிடத்தப்பட்டிருக்கிறது...
எதிரே
நின்றபடி
கைகூப்பிக்கொண்டிருக்கும்
கருட யுகங்கள்
என்னுள் இமைகளாய்
மூடித் திறந்து
துடிக்கும் இப்பொழுதில்
மகிழ்வின்
தீபம் ஒன்று
அரங்கனைச் சுற்றி
சுழற்றப்படுகிறது....
கன்னத்தில்
போட்டுக் கொள்ளுங்கள்...
பின் நீளும்
உங்களதும் என்னதுமான
உள்ளங்கையில்
ஈரத்தின் துளியொன்று
நிரம்பித் தளும்பும்...
அதை இதயத்திற்குள்
பூட்டிக் கொள்ளுங்கள்
காயத் தொடங்குவதற்குமுன்...
உங்களின்
இதயமெல்லாம்
இனி பக்தி
எண்ணெய் தடவப்படாத
ஆயிரங்கால்
தூண்களால் நிரம்பட்டும்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024