INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

RAJ SOUNDHAR

 A POEM BY

RAJ SOUNDHAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

The sound of Music
fluttering as bird in the sky
Aiming at it
as I wait with gun in hand
turning into a tortoise
It moves on slowly, Oh slowly.
As I move closer
the Music metamorphosing into a rabbit
hops and leaps
escaping ht hands.
Then turning into a tiger
as it chases me roaring
For me fatigued to the core
running far and more
Music
as the tender coconut water
climbs on to the tree’s crest
tasting best.
As I think of climbing the tree
changing into a tiny dewdrop
it settles on the tip of grass-blade
and freeze.
Then searching in vain
for the Music turned into god
and resonating
despite searching for it
in the dewdrop
Tender coconut water
Tiger
Rabbit
Tortoise
Bird
and so everywhere _
unable to apprehend
nor comprehend
and feeling anguished
Now the Music sounds inside me
as Satan.
It is very much there
Inside you too.
Place your hand on the left side of your chest
and check it.
Then softly stroking it
unwind yourself.
Raj Soundhar

இசை,
பறவையாய் வானில் பறந்தபடி ஒலிக்கிறது.
அதனைக் குறி வைத்து
நான் துவக்கோடு காத்திருக்க,
அது ஆமையாகி
மிக மெதுவாய் நகர்கிறது.
அதனருகே நான் செல்ல,
இசை முயலாய் மாறி
கரங்களுக்கு அகப்படாமல்
துள்ளிக் குதித்து ஓடுகிறது.
பின் புலியாய் மாறி
உருமியபடி எனைத் துரத்த,
ஓடிக் களைத்திருக்கும் எனக்கு
இசை
தபனம் தீர்க்கும் இளநீராய்
தென்னை உச்சிக்கு நகர்ந்து இனிக்கிறது.
நான் மரத்திலேற நினைக்கையில்
அது சிறு பனித்துளியாய் புல்நுனியில் உறைகிறது.
பின் கடவுளாய் மாறி ஒலிக்கும் இசையை,
பனித்துளியில்
இளநீரில்
புலியில்
முயலில்
ஆமையில்
பறவையிலென எங்கு தேடியும்
அறிய முடியாது தவிக்க,
இப்பொழுது, இசை சாத்தானாய்.
எனக்குள் ஒலிக்கிறது.
உங்களுக்குள்ளும் இருக்கிறது.
கையை,
இட மார்பில் வைத்து பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
பிறகு,
தட்டிக்கொடுத்து ஆசுவாசபடுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE