A POEM BY
FRANCIS KIRUPA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
How can I release this Sea
as tears
When my Dreams and Fantasies
my Heart and Blood
are turned into a pair of torn doormats
how to abstain from crying
Can’t slice the teardrop into two
as a boiled egg.
It could be that it is here
Love is lost.
Dear Friends of both genders and
ghastly betrayers
Instead of consolation
Give me a weapon
Let me kill that one
who has taught that Sea is but
Ship’s thoroughfare,
and be gone.
*தமிழின் தரமான கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபா கடந்த மாதம் காலமாகிவிட்டார். அவருக்கு என்னால் செய்ய முடிந்த எளிய அஞ்சலி இது:
அவருடைய இந்த அற்புதக் கவிதையின் ஆழத்தை என் மொழிபெயர்ப்பால் எட்டிப்பார்க்கக்கூட முடியவில்லை. _ லதா ராமகிருஷ்ணன்
* மிதியடி என்ற சொல் செருப்பையும் குறிக்கிறது. doormat, footwear. இருந்தாலும் காலின் கீழ் மிதிபடும் துணியெனும் பொருளில் doormatயையே பயன்படுத்தியுள்ளேன்.
ஜெ.பிரான்சிஸ் கிருபா வின் கவிதை
(வலியோடு முறியும் மின்னல்(டிசம்பர் 2004) தொகுப்பிலிருந்து)
இரண்டே இரண்டு விழிகளால் அழுது
எப்படி இந்தக் கடலை
கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்.
என் கனவும் கற்பனைகளும்
என் இதயமும் குருதியும்
கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது
எப்படி நான் அழாமலிருக்க முடியும்.
கண்ணீரின் ஒரு துளியை
அவித்த முட்டையைப்போல்
இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை.
அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ
நண்பர்களே தோழிகளே துரோகிகளே
ஆறுதலுக்கு பதில்
ஒரு ஆயுதம் தாருங்கள்
கடலை கப்பலின் சாலையென்று
கற்பித்தவனைக் கொன்றுவிட்டுப்
போகிறேன்.
No comments:
Post a Comment