A POEM BY
STALIN SARAVANAN
when asleep
They whisper
What is so great about it, alas _
Should wake him up once
and ask him to die then
An acquaintance of mine
wished to die in the railway station.
Watching the train and ceasing to be
is like the sheer bliss of catching the last train
Tolstoy and A.M. Raja
died in Railway Station only.
In the train Tolstoy got inside
standing all the way
won’t be a problem, I say
For will the dead one’s legs ache.
Stalin Saravanan •
கடைசி ரயில்
உறக்கத்தில் இறப்பதுதான்
எவ்வளவு அதிர்ஷ்டம் என்று
கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்
உறக்கத்திலே உறங்கிப் போவதில்
என்ன இருக்கிறது
ஒருமுறை அவரை எழுப்பிவிட்டு
இறந்து போக சொல்ல வேண்டும்
எனக்கு தெரிந்த ஒருவர்
ரயில்வே ஸ்டேஷனில்
இறந்து போக விரும்பினார்
ஓடும் ரயிலை பார்த்துக் கொண்டே மரணிப்பது
கடைசி ரயிலில் ஓடித் தொற்றிக்கொள்ளும் சுகம்
டால்ஸ்டாயும் ஏ.எம்.ராஜாவும்
ரயில்வே ஸ்டேஷனில்தான் இறந்துபோனார்கள்.
டால்ஸ்டாய் ஏறிய ரயிலில்
நின்றுக் கொண்டே போனாலும் பரவாயில்லை
மரணித்தவனுக்கு கால்கள் வலிக்கவாப் போகிறது?
No comments:
Post a Comment