A POEM BY
IYYAPPA MADHAVAN
he placed a hundred rupee note in his shirt pocket
Then placed two hundred
Then bought Tea and cigarette
Then Drinks too
Then when he parted ways
He wrung his eyes and wept
So he slept by his side during nights
Then he left saying he was going in search of family
Then also he wrung his eyes and wept
Left with no choice
he left him alone and went his way
He was giving rent to the shade
beneath the staircase
His friends who have turned soul mates
dialed his hundredth number and
talked with him in his hundredth phone
not lost as yet
Suddenly remembering him he called and said
that he was then in a big house at last
Said that he could stay along
whenever he would come there
After that he stopped talking to him
Henceforth he couldn’t place a hundred rupee note
in his shirt pocket and hold his head high,
mused he.
The poet is no more they said.
In his absence they praised him sky high and felt proud
The one who branded him a butcher
expressed sympathy profound.
Standing in front of Him turned lifeless
They chanted his verses
Shed tears profusely.
Eulogized him non-stop.
Held condolence meetings countless.
Wailing and lamenting
they grew terribly fatigued.
He who stayed away from those memorial meetings
was peeping into the memory of the shirt pocket
of the poet
that was not.
Iyyappa Madhavan
அவனிருந்தபோது அவன் ஜோபியில் ஒரு நூறு ரூபாய் வைத்தான்
பிறகு இரு நூறு வைத்தான்
பிறகு தேநீரும் சிகரெட்டும் வாங்கிக்கொடுத்தான்
பிறகு சரக்கு வாங்கிக்கொடுத்தான்
பிறகு அவன் பிரிந்து சென்றபோது
கண்களைக் கசக்கி அழுதான்
ஆகையால் இரவுகளில் அவனுடன் உறங்கினான்
பிறகு அவன் குடும்பம் தேடிப் போவதாகச் சொல்லிக் கிளம்பினான்
அப்போதும் அவன் கண்களைக் கசக்கி அழுதான்
வேறு வழியின்றி
அவனைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டான்
அவன் மாடிப்பட்டுகளின் கீழ்
இருந்த நிழலுக்கு வாடகைக் கொடுத்து வாழ்ந்துகொண்டிருந்தான்
அவன் ஆன்மாவில் கலந்த நண்பர்கள் அவனின் தொலையாமலிருந்த நூறாவது போனில்
நூறாவது எண்ணில் பேசினார்கள்
திடீரென அவன் ஞாபகம் வந்து அழைத்து பெரிய வீட்டிலிருப்பதாகச் சொன்னான்
அங்கு வரும்போது அந்த வீட்டில் தங்கலாமென்று சொன்னான்
அதன் பிறகு
அவனுடன் பேசுவதை அவன் நிறுத்திக்கொண்டான்
அவன் இனி அவன் ஜோபியில் நூறு ரூபாய் வைத்துவிட்டு
பெருமைப்பட முடியாதென நினைத்துக்கொண்டான்
கவிஞன் இறந்துவிட்டான் என்று சொன்னார்கள்
அவனில்லாத போது அவனைப் பேசி பெருமைப்பட்டுக்கொண்டார்கள்
கொலைகாரன் என்று சொன்ன ஒருவன்
அவன் உடலின் முன் நின்று
ஆழ்ந்த அனுதாபங்களை வெளிக்காட்டினான்
அவன் உடலின் முன்
அவன் கவிதைகளைப் பாடினார்கள்
அவனுக்காய் அழுது மருகினார்கள்
அவன் புகழ் பாடி ஓய்ந்தார்கள்
கணக்கில்லாமல் அஞ்சலிக்கூட்டங்கள் நடத்தினார்கள்
ஒப்பாரி வைத்து களைத்துப்போனார்கள்
அவன் இறப்புக்கோ அஞ்சலிக்கூட்டத்திற்குப் போகாதவன்
கவிஞனின் இல்லாத சட்டைப்பை நினைவில் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.
No comments:
Post a Comment