A POEM BY
VELANAIYUR RAJINTHAN
waits the window
for your re-entry.
Upon the book shelf
your hand prints
remain afresh.
The white shirt
I won’t give for ironing
For your hue is there all over
Whenever I open the door of the cabin
There flutters thy remembrance.
In honour of that instant
when the inner door opened
I have planted ‘Chembaruthi’
around my abode.
When they flower
You would come for sure
with the Spring’s flavour!
பட்டாம்பூச்சி வளர்ப்பவன்
________________________
திறந்தபடி சாளரம்
காத்திருக்கிறது
மீண்டும் உன் வருகைக்காய்
ஏந்தாளத்து ஏட்டின் மேல்
கலையாமல் இருக்கிறது
நீ பதித்துச்சென்ற கைத்தடம்
வெண்ணிறச் சட்டையை
சலவையிடப் போவதில்லை
ஒட்டியிருப்பது உன்றன் வண்ணம்
அறைக் கதவைத்
திறக்கும் நொடியெல்லாம்
சிறகடிக்கிறது உன் நினைவு
அகக்கதவு திறந்த
உனதன்பின் தருணத்தின் பால்
வீட்டைச்சுற்றி
செம்பருத்திச் செடிகள் நாட்டியுள்ளேன்
அவை பூக்கின்ற போது
கட்டாயம் நீ வந்தாக வேண்டும்
வசந்தத்தின் வாசனையோடு!
- வேலணையூர் ரஜிந்தன்.
No comments:
Post a Comment