INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

KO.NATHAN

 A POEM BY

KO.NATHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

ஈ AKA ழ’ BIRD’S ம் SONG
(EE aka ZHA BIRD’S ‘M’ SONG)
That Bird
had the tinge of red+black.
Upon that
Time wrote the hunger of Death
umpteen number of times.
The Bird
hunting for quiet
has hatched eggs
all over the jungle.
Rising in the sky
in singular voice
throwing away the wing
It wanders emitting weak cry.
That in abodes with no lamp lit
The prayer would bloom in flower
So, the bird growing up within.
Along a river-bank
A Seashore
A pond
Bird’s wet footprints.
That is made of water.
Of the Land?
or Lifeblood?
Ko. Naathan
ஈ'எனும் 'ழ' பறவையின் 'ம்'
பாடல்.
.............................................
அந்த பறவை,
சிவப்பு+ கருப்பு நிறமுடையது.
காலம்,
அதன் மேல் மரணத்தின்
பசியை எழுதி எழுதி அழித்தது.
பறவை,
மௌனத்தின் வேட்டையில்
காடு முழுவதும்
கரு முட்டைகளை இட்டிருக்கிறது.
வானெழுந்து,
ஒற்றைக் குரலில்
சிறகெறிந்து
ஈன ஓசையில் அலைந்து திரிகிறது.
தீபம் ஏறாத வீடுகளில்
பிரார்த்தனை மலரில் பூக்கும்
என,
உணர்வில் வளரும் பறவை.
ஒரு நதிக்கரையில்,
ஒரு கடற்கரையில்,
ஒரு குளக்கரையில்,
பறவை, நடந்த ஈரச் சுவடுகள்
அது
நீராலானது.
நிண நீரிலானதா?
நில நீரிலானதா?
.
ஏகத்துவன்
.......................................................................................................................
(* aka _ also known as
தலைப்பே மொழிபெயர்ப்பாளரை முழிபிதுங்கச் செய்வது! முழுக்க முழுக்க குறியீடுகளாலான கவிதை. ஒரு காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, ஒரு நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு எளிதாக விளங்கிவிடலாகும் குறியீடு களும், சொல்வழக்குகளும் மற்றவர்களுக்குப் பூடகமா கவே அமையக்கூடும். கவிதையின் வரிகளிலுள்ள சொற்கள் எழுத்தால் மட்டுமானதல்லவே! கவிதையின் பொருள் சார்ந்தும் கவிதையின் பூடகத்தன்மையும், இருண்மையும் அமையும். வாழ்நிலத்திலிருந்து இடம்பெயர்வோருக்கு மனமே வாழ்நிலமாக விரிவது இயற்கை. இந்த இயற்கைநியதி மொழிபெயர்ப்பில் எந்த அளவுக்கு இலக்குமொழியில் கைகூடும் என்பது கேள்விக்குறி. இந்தக் கேள்விக்குறிக்குப் பல காரணங்களும், காரணிகளும் உண்டு - மொழி பெயர்ப்பாளரின் போதாமை அவற்றில் ஒன்று என்ற அறிதலோடு இந்தக் கவிதையை மொழிபெயர்த்திருக் கிறேன். கவி விரும்பினால் சில தெளிவுகளைத் தந்து கவிதை மொழியாக் கத்தை செம்மைப்படுத்த உதவலாம். இல்லை, நான் செய்திருப்பதே போது மெனலாம் - மனமாரவோ, மொழிபெயர்ப்பாளர்பால் மனங் கனிந்தோ! - லதா ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024