INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, October 5, 2021

MOHAMED BATCHA

 A POEM BY

MOHAMED BATCHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)




Some rip apart the components of Language and
twining them into garlands
sell them!
Some build nests inside languages
and hatch eggs and make them fly!
The wanderer’s legs do go past lands
treading on languages many.
The saplings of the fields
do sprout and grow listening to songs.
The roots translate them and
take them off to the frontiers!
Of the two clasped in the yoke
If one is cat and the other, rat
language would rot
with no tongue and
become naught.
It is only when my mother tongue
kisses fellow languages lovingly
it nurtures itself and with its roots
spread far and wide
gush forth streaming !
I bury myself cozily in the languages
Some day
I too would spread my branches
and stand tall and spectacular
like a tree!
Mohamed Batcha

மொழிகளின் கூறுகளைச் சிலர்
கிழித்து மாலைகட்டி விற்கிறார்கள்!
சிலர் மொழிகளுக்குள்
கூடுகட்டி
குஞ்சுகள் பொரித்துப் பறக்க விடுகிறார்கள்!
தேசாந்திரியின் கால்கள்
பல மொழிகளை மிதித்துக் கொண்டுதான்
நாடுகளைக் கடக்கிறது!
வயல் நாற்றுகள்
பாடல்கள் கேட்டு வளர்கின்றன...
வேர்கள் மொழி பெயர்த்து
அவற்றை எல்லைகளுக்குக் கடத்துகின்றன!
நுகத்தடியில் பூட்டும் இரண்டில்
ஒன்று பூனையும், ஒன்று எலியுமாக இருந்தால்
மொழியும்
மொழியற்று இறந்து விடும்!
என் மொழியென்பது
பிற மொழிகளையும் ஆசையாக முத்தம் இடும் போதுதான்
தன்னையே பதியமிட்டுப்
பரந்து விரிந்து பாய்ந்தோடுகிறது!
மொழிகளுக்குள் என்னையும் புதைத்துக் கொள்கிறேன்
நானும் என்றாவது
கிளை விரித்து மரமாகக் காட்சியளிப்பேன்!
.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE