A POEM BY
SAFNAS HASIM
Stretching as the bars
Only when I lock
Would open a window.
Each time I scream outside
The bars would bend and curve.
Each time
Just the wind would enter inside.
In the prison lock at the bars
there would be a call register for my
scream.
Visit by the wind:
Scheduled:
Only twice
In the schedule of wind’s arrival
I can be included in any slot.
Only during the schedule of screaming
I abide by the agenda.
And at that time alone
the wind
would cross the window
for the prisoners’ breath.
SAFNAS HASIM
ஒரு துண்டுச் சிறை.
கைதிகளின் கண்கள்
கம்பிகளாய் நீண்டு
நான் பூட்டிய போது மட்டும்
திறக்கும் ஒரு சன்னல்.
நான் வெளியே கூக்குரலிடும்
ஒவ்வொரு முறையும்
கம்பிகள் வளைந்து கொடுக்கும்.
ஒவ்வொரு முறையும்
காற்று மட்டும் உள்ளே போகும்.
கம்பிக்கண் சிறைப்பூட்டில்
என் கூக்குரலுக்கு
ஒரு பதிவேடு இருக்கும்.
காற்றுவரவு;
நேரம்;
இரு நிரல்கள் மட்டுமே.
காற்று வரவின் நிரலில்
என்னை எந்த நேரத்திலும்
எழுதலாம்.
கூக்குரல் நேரத்தில் மட்டும் தான்
நேர நிரலை நான் நிரப்புகிறேன்.
அப்போது மட்டும் காற்று
கைதிகள் மூச்சிற்காய்
சன்னலைக் கடக்கும்.
No comments:
Post a Comment