INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

NAANARKAADAN SARA

 A POEM BY

NAANARKAADAN SARA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Underneath the night lamp
before midnight’s pale
Your face glowed
At that instant
as a crescent moon
you were guiding a night
that came your way
when in a bus you were going away
Those kisses in thousands countless
which I couldn’t plant on your cheeks
hugging you all too close
I went on scattering them all over
right till dawn
All those dark
All those nights
have hung your kisses
on these branches
ripened in sun
and watching playfully.
Only after realizing that
you have nothing to talk to me
I hone my solitariness
Yet again
The lone quill
Of a solitary bird
I remain.

Naanarkaadan Sara

இரவு விளக்கினடியில்
நள்ளிரவு மங்கலுக்கு முன்
ஒளிர்ந்ததுன் முகம்.
அப்போது நீ
ஒரு மூன்றாம் பிறை நிலவு போல்
ஒரு பேருந்து பயணத்துக்கிடையே வாய்க்கப் பெற்ற
ஓர் இரவை
வழி நடத்திக் கொண்டிருந்தாய்
அந்த இரவை விடவும் இறுக்கமாக
உன்னை இறுக அணைத்து
உனது கன்னங்களில்
இட்டுத் தீர்க்க இயலாமற் போன
என் பல்லாயிரக்கணக்கான முத்தங்களை
விடிய விடிய
வழியெங்கும் வீசினேன்
அவ்வளவு இருளும்
அவ்வளவு இரவும்
உன் முத்தங்களை
இந்த வெயில் பழுத்த கிளைகளில்
தொங்க விட்டு
வேடிக்கை பார்க்கின்றன.
என்னிடம் பேசுவதற்கு
உன்னிடம் எதுவும் இல்லை என்பதை
உணர்ந்த பிறகு தான்
என் தனிமையை
மீண்டும்
மெருகேற்றிக் கொள்கிறேன்
நான்
தனிமைப் பறவையின்
ஒற்றைச் சிறகு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024