INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Tuesday, March 29, 2022

MAANASEEGAN

TWO POEMS BY
MANASEEGAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)
Till the time there remains the
apprehension of it turning into Love
it remains Love pristine.
Only when one starts thinking
if it turns into Love
So what
A rose becomes a monitor lizard.
If we can tell someone
I loved you from 6.02 to 8.04 _
How nice it would be?
Life is no big deal
Not in any way bigger than
the candle that gets snuffed
every now and then
and kept on the table anon.
With hands unknown
in a few minutes glowing
power-cut minutes
prove salvation.

Maanaseegan
இது காதலாகி விடுமோ?
என்கிற பயம் இருக்கிற வரை
அது காதலாகத்தான் இருக்கிறது..
அப்படி ஆனால்தான் என்ன ?
என்று யோசிக்கிற போதுதான்
ஒரு ரோஜா உடும்பாகிறது..
'நான் நேற்று மாலை
6.02 லிருந்து 8.04 வரை
உன்னைக் காதலித்தேன்'
என்று
யாரிடமாவது புன்னகையோடு
சொல்ல முடிந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் ?
அணைத்து அணைத்து
மேஜையில் கிடத்தப்படும்
மெழுகுவர்த்தியை விட
பெரிதொன்றுமில்லை இந்த வாழ்க்கை..
ஏதேதோ கரங்களால்
ஓரிரு நிமிடங்கள் சுடரும்
மின்தடை நிமிடங்களே
மோட்சமாய் அசைகின்றன..

* மானசீகன் * 


                        (2)

From the fire encountering

the countenance

The odour of lust flows
as the sari’ pallu’
Smile pretentious
feigned for the lens
formless and flying
circling in the room
as the sleep-disrupting Cicada
The images on the touch screen
I keep merely watching
as the melting and oozing
ice-cream unrelished.
Someone is there by your side
Let him be pardoned.
If I were behind you
I would have penned this same poem
with these same fingers
but in a different place….
I fill my eyes with the dark
that swallows all
Just as the Hunger of Dark
Hunger for Dark too
remains all-time ravenous.

Maanaseegan

முகம் பார்க்கும்
நெருப்பிலிருந்து
சேலைத் தலைப்பாய்
வழிகிறது விரகத்தின் வாசனை..
புகைப்படக் கருவிக்காய்
பிறந்த செயற்கைப் புன்னகை
அருவமாய்ப் பறந்து
அறையில் சுற்றிக்
கொண்டிருக்கிறது
உறக்கம் கலைக்கும் சில்வண்டாய்..
தொடுதிரையில் தெரியும்
பிம்பங்களை
வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறேன்;
உண்ணாமல் உருகி வழியும்
பனிக்கூழாய்..
உன் பக்கத்தில்
யாரோ இருக்கிறார்கள்;
மன்னித்து விடலாம் ;
உன் பின்னால் நானிருந்தால்
இதே கவிதையை
இதே விரல்களால்
வேறு இடத்தில் எழுதியிருப்பேன்..
எல்லோரையும் விழுங்கும்
இருளின் நிறத்தை
விழி கொள்ளாமல்
கவ்விக் கொள்கிறேன் ;
இருளின் பசியைப் போல்
தீர்வதேயில்லை,
இருள் மீதான பசியும்
* மானசீகன் *

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024