INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 5, 2022

MAIYILIRAGU MANASU SHIFANA

 A POEM BY

MAIYILIRAGU MANASU SHIFANA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



It is I
who rely
on these people
for anything and everything
For holding me when I slip and fall
Once fallen
to lift me up
I stretch my hands towards them
I insist that they come to my aid
whenever I am-grief-laden.
Whenever feeling weary of life
and unable to bear
anymore
the inner strife
with the eyes turning moist
I think of so many
known and alien ones
Please have me also in your prayer
I plead
Please share my joy
I appeal
Saying non-stop
in my ears
_’There is still time
for your future success”
_ So a slave
I keep searching for
always

மயிலிறகு மனசு ஷிஃபானா

நான் தான்
இந்த மனிதர்களை
எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்து
நிற்கிறேன்
விழ நேருகையில்
தாங்கிப் பிடிக்கவும்
விழுந்து விட்ட பின்னர்
தூக்கி விடவும்
கைகளை நீட்டுகிறேன்
என்
துயரத்திலெல்லாம்
துணை நிற்குமாறு
வற்புறுத்துகிறேன்
வாழ்வின் மீது
சலிப்புற்று
தாள முடியாமல்
கண்கள் கசியும் போதெல்லாம்
யார் யாரையோவெல்லாம்
நினைக்கிறேன்
உங்கள் பிரார்த்தனைகளில்
என்னையும் சேர்த்துக்
கொள்ளுங்களென மன்றாடுகிறேன்
என்
மகிழ்ச்சிகளையும்
பகிர்ந்து கொள்ளுங்களென
விண்ணப்பிக்கிறேன்..
இன்னும்
உன் எதிர்கால வெற்றிக்கு
காலமிருக்கிறதென்று
என் காதுகளுக்குள்
ஓயாமல்
சொல்லிக் கொண்டிருக்கும்
ஒரு அடிமையைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறேன்..

மயிலிறகு மனசு

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024